September 16, 2024
  • September 16, 2024
Breaking News
June 13, 2018

ஒரு கனவின் குறிப்புகள் – ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது

By 0 1099 Views

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் ஒன்று வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது.

பென்குயின் பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகத்துக்கு ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘கிருஷ்ணா திரிலோக்’ என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அனுமதி பெற்று வெளியிட்டிருக்கிறார்.

ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்த ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்தை இயக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ‘டேனி பாயல்’ எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்தப் புத்தகத்தில் ரஹ்மான் விளம்பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றதுவரையான பயணம் மட்டுமல்லாது மற்றும் அவரது மன ஓட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதன் முன்னுரையில் ஏ.ஆர்.ரஹ்மான் , “நான் யார்? எங்கே சென்று கொண்டிருக்கிறேன்?” என்பதை நீங்கள் இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.

அவர் வாசித்ததை நாம் வாசிக்க… நல்ல சந்தர்ப்பம்..!