“ஒவ்வொரு நாள் செய்தித்தாளை பிரிக்கும் போதும் நம்மைச் சுற்றிலும் நிறைய கொலைகள் நடந்து கொண்டிருப்பது புரிகின்றது. அந்த ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அந்த உண்மைதான் இந்த படத்துக்கான கருவானது..!” என்றார் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் கதையை எழுதி இயக்கி இருக்கும் மு.மாறன். லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனத்துக்காக வி.என். ரஞ்சித் குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக […]
Read Moreவெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கான முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளது: தலைமை வழிகாட்டியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் செயல்படுகிறார். (residential programme) சென்னை, 15 பிப்ரவரி 2023: வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸின் துணை நிறுவனமான வெராண்டா ஐஏஎஸ் நிறுவனம் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவோருக்காக, அகாடமி ஃபார் சிவில் சர்வீஸ் ஆஸ்பிரண்ட்ஸ் (ஏசிஎஸ்ஏ – ACSA) என்ற முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க […]
Read Moreகும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் எனும் இருவர் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான். இரண்டு குழந்தைகளுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள். குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாக படிக்கிறார்கள். அவர்களது கிராமத்தில் கோவில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி […]
Read Moreதிருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஜவஹர் மித்ரனின் அடுத்த படைப்பான அரியவன் என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று (12-02-2023) வெளியிடப்பட்டது. இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. மாரிச்செல்வன் கதை எழுத, எடிட்டிங் மா தியாகராஜன் மற்றும் ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ […]
Read Moreசிங்கப்பூர் பயணத்துறை கழகம வர்த்தக கூட்டுச் செயல்பாட்டாளர்களுடன் பயண செயல்பாடுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்துகிறது! இந்திய இளையதலைமுறையினரையும் மற்றும் திருமணப் பயணங்களையும் சிங்கப்பூருக்கு ஈர்ப்பதை 2023-ம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன; “ஒன்றாக இணைந்து மீட்சிக்கான வழிகளை மேம்படுத்துவோம்!” [‘Ramping up pathways to recovery, together!] என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட வர்த்தக செயல்பாட்டைச் சிங்கப்பூர் பயணத்துறை கழகம் மேற்கொள்கிறது. சென்னை, பிப்ரவரி 13, 2023: சிங்கப்பூர் பயணத்துறை கழகம் (STB) 2023-ம் ஆண்டில் இந்தியப் […]
Read Moreபடத்தின் தலைப்பபே கதையைச் சொல்லிவிடும். சாதிப்பிரச்சினைதான் கதையின் அடிநாதம். அதிலும் ஆணவக் கொலையை முன்னிறுத்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சுகுமார் அழகர்சாமி. படத்தின் தொடக்கத்தில் நான்கு ஜோடி காதல் கதைகளுக்கான சான்றுகள் காட்டப்படுகின்றன. அந்த கதைகள் என்ன ஆயின… எப்படி முடிந்தன என்பதுதான் படத்தின் கதை. தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து வரும் ஆணவக் கொலைகள் பற்றி ஆன்லைன் மூலம் அறிந்த அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டே, இந்தியா வந்து அவற்றைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்து மக்களிடையே […]
Read Moreஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரன் பேபி ரன் படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது:- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, இந்த படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. பல முன்னணி திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் ஓடுகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்கான திரைகள் […]
Read More