படங்களில் இரண்டு வகை. முதல் வகை, இப்படி எல்லாம் நடக்கிறதோ இல்லையோ – ஆனால், மக்களுக்குப் பிடிக்கும் என்கிற அளவில் கற்பனை கலந்து எடுக்கப்படுபவை. மக்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ உண்மையில் இப்படித்தான் நடக்கிறது என்று உண்மையை உரித்துச் சொல்வது இரண்டாம் வகை. இந்த இரண்டாம் வகையைச் சார்ந்ததுதான் இந்தப்படம். ஆனால் இப்படி எடுப்பதற்கு மகா துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் இயக்குனர் கிருத்திகா உதயநிதியிடம் நிரம்பவே இருக்கிறது. “இதுதான் கதை…” என்று அப்படியெல்லாம் இரண்டு வரியில் சொல்லி […]
Read Moreஎல்லோர் வாழ்விலும் எதிர்பாராத தருணம் என்று ஒன்று வரும். அதில் நல்லதும் நடக்கலாம் – தீயதும் நடக்கலாம். அது நம் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது என்பது உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம்தான். இந்த லைனை வைத்துக்கொண்டு இரண்டே கால் மணி நேரத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். அப்படி ஒரு தருணத்தில் நாயகன் கிஷன் தாசும் நாயகி ஸ்மிருதி வெங்கட் டும் சந்தித்து பழகிக் காதல் கொள்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே இளம் […]
Read Moreஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் திரு.வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்தது. விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சி அடைகிறது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவளித்த ரசிகர்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். “விடுதலை’’ஆழமான கதையும், எளிய மக்களின் வாழ்க்கைமுறையும், அரசியல் களத்தின் உண்மைதன்மையும் […]
Read More“பெரிதாக யோசி…” என்ற பதத்துக்குப் பொருத்தமாக படங்களை எடுக்கக்கூடிய இயக்குனர் ஷங்கர், தெலுங்கு ஸ்டார் ராம்சரனுடன் இணைந்து பான் இந்திய படமாக உருவாக்கியிரக்கும் இந்தப் படம் அரசியலையும், ஆட்சியமைப்பையும் அடிப்படையாகக் கொண்டது. ஆந்திராவை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்துக்கு ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா என்று இரண்டு மகன்கள் இருக்க, அடுத்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியத்தில் அவசரக் கூட்டம் போட்டு எல்லோரையும் நேர்மையாக நடந்து மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்று […]
Read Moreஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமான அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நடன நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார். ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் […]
Read Moreதமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , […]
Read Moreநாம் நம்மை ஒத்த மனிதர்களின் மகிழ்ச்சி; துயரத்தை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் நாம் கடந்து செல்லும் சமுதாயத்தில் நாம் அதிகம் கவனிக்காத மனிதர்களின் வாழ்க்கை நம்மில் இருந்து சற்று வித்தியாசப்பட்டேதான் இருக்கிறது. அப்படியான மனிதர்களின் வாழ்க்கையை அப்பட்டமாகத் தருவதுதான் இயக்குனர் பாலாவின் பாணி அல்லது பணி. இந்தப் படத்திலும் அது தவறவில்லை. பாலா பார்க்கும் மனிதர்களும் சரி, அவர்களது வாழ்க்கைச் சிக்கல்களும் சரி… சற்றே வித்தியாசமானவைதான். அப்படித்தான் இருக்கிறான் அவர் படைத்த வணங்கானும். தமிழகத்தின் […]
Read More