July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பகத் சிங்குடன் கங்கனாவை ஒப்பிடுவதா விஷாலை நோக்கி குவியும் எதிர்ப்பு அம்புகள்
September 11, 2020

பகத் சிங்குடன் கங்கனாவை ஒப்பிடுவதா விஷாலை நோக்கி குவியும் எதிர்ப்பு அம்புகள்

By 0 765 Views

மும்பையில் ஆளும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு சவால் விடும் வகையில் காணொளியை வெளியிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் செயலை, 1920களில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் செயலுடன் ஒப்பிட்டு தமிழ் திரைப்பட நடிகர் விஷால் டிவிட்டரில் பாராட்டிய விவகாரம் அவருக்கு எதிரான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தீவிரமாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், “உங்களுடைய துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க ஒருமுறைக்கு இரு முறை கூட நீங்கள் யோசித்திருக்கவில்லை.

இது உங்களுடைய தனிப்பட்ட பிரச்னை கிடையாது. ஆனாலும், அரசின் கோபத்தை எதிர்கொண்டு வலுவுடன் நீங்கள் நின்றது மிகப்பெரிய உதாரணமாகும். இது 1920களில் பகத் சிங் செய்ததற்கு ஒப்பாகும். பிரபலங்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறி பேச்சு சுதந்திரம் (அரசியலமைப்பு 19ஆவது விதி) என்று விஷால் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நடிகர் விஷாலுக்கு கங்கனாவின் ரசிகர்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து கருத்துகளை பதிவிட்ட நிலையில், வரலாற்று ஆர்வலர்களும் டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் சிலரும் பகத் சிங்கை விஷால் எவ்வாறு கங்கனாவுடன் ஒப்பிடலாம் என்று விஷாலை ‘ வைத்து செய்து ‘ வருகிறார்கள்.

ஒரு விஷயத்தை பதிவிடுவதற்கு முன்பு சற்று யோசித்து செயல்பட வேண்டும் புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள்.