August 1, 2026
  • August 1, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குடிநீர் வாரியத்துக்கு 45 லட்சம் செலவில் சாக்கடை தூர் வாரும் இயந்திரம் – உதயநிதி வழங்கினார்
June 6, 2022

குடிநீர் வாரியத்துக்கு 45 லட்சம் செலவில் சாக்கடை தூர் வாரும் இயந்திரம் – உதயநிதி வழங்கினார்

By 0 592 Views

உதயநிதி ஸ்டாலின், ஆரி அர்ஜுனா, தான்யா ரவிச்சந்திரன், இளவரசு உள்பட பலர் நடித்திருந்த படம் நெஞ்சுக்கு நீதி.

ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக். படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கினார்.

படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.

இதில் கலந்து கொண்டு உதயநிதி பேசியதாவது:

“மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளோம். அதற்கு கிடைத்த பாராட்டிற்கு நன்றி. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி. எனக்கு எந்தவிதமான கஷ்டம் இல்லாமல் படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி.

படம் பார்த்தபிறகுதான் படத்தில் ஆரிதான் ஹீரோ என்று தெரிந்தது. படத்தின் இயக்குனர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்தான். ஜெயித்து காட்டிவிட்டார் அருண்.

படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம்..!” என்றார்.

விழாவில் உதயநிதி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாதாள சாக்கடை தூர்வாறும் எந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.