November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தம்பி உதயநிதி தங்கை நித்யா மேனன் தேவதை ரேணுகா – மிஷ்கின்
February 2, 2020

தம்பி உதயநிதி தங்கை நித்யா மேனன் தேவதை ரேணுகா – மிஷ்கின்

By 0 783 Views
Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார்.
 
உதயநிதிஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான  இப்படம் வெற்றி அடைந்ததாக நன்றி சொல்ல பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.
 
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது…
 
பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்த படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. 
 
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது…
 
வெற்றிப்படம் தந்து மூணு வருடம் ஆகிவிட்டது. இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை சுமாரான படங்கள் தான். இந்தப்படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ராஜ்குமார் தான் ஹீரோ, நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன் அவ்வளவுதான். இந்தபடத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி சி ஶ்ரீராம் சார் இருவருக்கும்  நன்றி.  நானும் மிஷ்கின் சாரும் முன்னாடியே படம் செய்ய வேண்டியது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கிறது. இந்தப்படத்தில் அது  நடந்தது மகிழ்ச்சி..!
 
இயக்குநர் மிஷ்கின் பேசியது…
 
சித்திரம் பேசுதடி படம் முதல் இன்று வரை என்னை நல்லபடங்களில் ஆதரித்து மற்ற படங்களில் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி. என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார் தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன்.
 
அவர் பாடல்கள் தான் சினிமாவுக்கு நான் வரக்காரணம். அவருக்கு என் நன்றி. என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதயை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன்.
 
என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை. ரேணுகா மேடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் ஒரு தேவதை. 
 
ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன். கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாக செய்வான்.  அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப்படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான்.
 
அதிதி கூட  எப்போதும் சண்டை தான். பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன்.
 
இந்தப்படம் பிடிக்காதவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. எல்லோரது அன்புக்கும் நன்றி..!