July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி
February 28, 2021

14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி

By 0 555 Views

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப்பட்டுள்ள படம் மட்டி (Muddy).

புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன்  மற்றும் ரிதான்  கிருஷ்ணா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இப்படம் பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரகபல்  பேசும் போது..

“இந்தப்படம் நன்றாக வந்ததிருக்கிறது என்றால் அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன.  இந்த படத்தில் எடிட்டிங், கேமரா, மியூசிக், சிஜி உள்பட டெக்னிக்கல் வேலைகள் அதிகம். 14 கேமராக்கள் வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இது என் முதல் படம்…” என்றார்.

வசனகர்த்தா ஆர். பி.பாலா…

“நான்கு வருடம் கஷ்டப்பட்டு இந்தப் புராஜெக்டை உருவாக்கி இருக்கிறார்கள். எடிட்டர் ஜான் லோகேஷ் ராட்சசன் படத்தில் மிரட்டி இருந்தார். அந்தப் படத்தை விட இந்தப்படத்தில்  அதிகமாக உழைத்திருக்கிறார்…”

நடிகர் அஜித் கோஷி…

“நான் படத்தில் சிறிய ரோல்தான் பண்ணிருக்கேன். இந்த கேரக்டரை இயக்குநர் ஒரு மானிட்டரில்  காட்டினார். அதனால் படத்தில் என் கேரக்டருக்காக நன்றாக  தயாராக முடிந்தது…” என்றார்.

எடிட்டர் சான் லோகேஷ்…

“ராட்சசன் படம் முடித்த பின் எதை ஓ.கே செய்வது என்ற யோசனையில் இருந்தேன். இயக்குநர் மட்டி படத்தின் கதையைச் சொன்னபோது எனக்கு அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது. ஷுட் செய்த புட்டேஜை காட்டினார்கள். இந்தப்படம் ரொம்ப சேலஞ்சாக இருக்கும் என்று நினைத்தேன்…”