November 24, 2024
  • November 24, 2024
Breaking News
May 8, 2019

எஸ்ஜே சூர்யா நடித்த முதல் யு சான்றிதழ் படம்

By 0 920 Views

எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்து நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் வில்லனாக ஒரு எலி நடித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டில் எஸ்ஜே சூர்யா பேசியதிலிருந்து…

“எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும் கதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்தையும் தரமானதாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் அவர்களின் படைப்புகள் வெளியாகும்.
 
ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு, “ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா?” என்றார். கதை சொல்லவந்த நெல்சன், “நீங்கள் – ஒரு எலி…” என்று ஆரம்பித்ததும் ‘எப்படி இருக்குமோ?’ என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காலை முதல் நள்ளிரவு வரை அயராமல் சுறுசுறுப்புடன் இருப்பார்.
 
Monster Audio Launch

Monster Audio Launch

குழந்தைகளுக்கும்… செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

 
சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதில் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார்.
 
எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’.
 
வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் என் வாழ்க்கையை சீராக அமைத்து கொள்வேன்.
 
தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நுணுக்கமாக பணியாற்றியிருக்கிறார்கள். 17 நாட்களுக்குள் இப்படத்தை வெளியாக முயற்சி எடுத்திருக்கிறார்கள். ‘மாயா‘, ‘மானகரம்’ , ‘மான்ஸ்டர்‘, போன்ற தரமான படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வாழ்த்துக்கள்..!”