November 21, 2024
  • November 21, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் வருத்தம் தருகின்றன – த்ரிஷா
July 23, 2018

குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் வருத்தம் தருகின்றன – த்ரிஷா

By 0 1040 Views

ஹீரோவை மையப்படுத்தாமல் த்ரிஷாவை மட்டும் நாயகியாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் மோகினி. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகி த்ரிஷா , இயக்குனர் ஆர்.மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

“இந்த படத்தை மிக பிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் சிறப்பாக நடித்துள்ள த்ரிஷா நினைத்திருந்தால் வெறொரு கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.

 Mohini press meet

Mohini press meet

இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தைக் கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் ‘எபி ஜெனெடிக்ஸ்’ என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம்.

இப்படத்தின் vfx காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது. இப்படம் தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் த்ரிஷா நிறைய சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சிகையாக உருவாக்கியுள்ளோம். ஆனாலும், இது ஆவிக் கதையாக இல்லாமல் இவையெல்லாம் நடப்பதற்கான அறிவியல் தேடல்களுடன் எடுக்கப்பட்டுள்ளது..!” என்றார் இயக்குநர் மாதேஷ்.

 Mohini press meet

Mohini press meet

நாயகி த்ரிஷாவோ, “நான் இப்படத்தில் ‘மோகினி’ மற்றும் ‘வைஷ்ணவி’ என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான்.

தினம் தினம் காலை எழுந்து செய்திதாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றிதான் செய்தி அதிகமாக உள்ளது. அந்தச் செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்தச் செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்புதான் இருக்கும்.

இந்த ‘மோகினி’ படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை நாங்கள் லண்டன் , பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம்..!” என்றார்.