January 4, 2025
  • January 4, 2025
Breaking News

MAX திரைப்பட விமர்சனம்

By on December 31, 2024 0 21 Views

ஒரு அதிதி புதிரியான ஆக்சன் கதையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குனர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. நம்மையும் கவலைப்பட விட முடியாத அளவுக்கு அப்படி ஒரு ‘மாஸ் பேக்கேஜ்’ கொடுத்து இருக்கிறார்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு போலீஸ் ஸ்டேஷன். அதற்கு பின்னால் எல்லாம் காடு. அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. இந்த போலீஸ் ஸ்டேஷன் என்பது சென்னையில் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

அந்த போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக வந்து சேரவிருக்கிறார் இன்ஸ்பெக்டர் சுதீப். யாருக்கும் அஞ்சாதவர் என்பதால் பல சஸ்பென்ஷன்களைப் பார்த்து பல ஊர் மாற்றப்பட்டு இப்போது இங்கே வந்து சேர்ந்திருக்கிறார்

அடுத்த நாள் காலையில் சார்ஜ் எடுக்க, முதல் நாள் மாலை சென்னைக்கு வந்த வீட்டுக்கு வரும் வழியிலேயே அராத்து மந்திரி மகன்கள் இரண்டு பேர் கடுமையான போதையில் தடுப்புகளை மீறி காரில் வந்ததும் இல்லாமல் ஒரு பெண் போலீசின் சட்டையை கிழிக்கிறார்கள்.

நாலு தட்டு தட்டி லால்கப்பில் போடும் சுதீஷ், அவர்கள் மீது எப்ஐஆர் போடச் சொல்கிறார். ஆனால், அவர்களின் கொடூர பேக்கிறவுண்ட் தெரிந்த ஒரு சப் இன்ஸ்பெக்டர், அவர்களை விடுவிக்க சொல்ல, கடமையைச் செய்ய விடாத குற்றத்துக்கு அவர் மீதும் எஃப் ஐ ஆர் போடச் சொல்லி விட்டு வீட்டுக்குப் போகிறார்.

ஆனால், அசந்தர்ப்பமாக அவர்கள் இருவரும் லாக் ஆப்பிள் மரணமடைய, அவர்களை மீட்க ரவுடிகள் பெரும் படையோடு வர, என்ன ஆகிறதென்பது டெரர் ஸ்கிரீன்பிளே.

ஒரே இரவில், ஒரே  லொகேஷனில் ஒரு ஆக்ஷன் கதையைப் படமெடுக்கவும் அதில் நடிக்கவும் ரொம்பத்தான் தில் வேண்டும். இயக்குனர் விஜய் கார்த்திகேயன் அந்த தில் இருக்க அவரை நம்பி இந்த படத்தை ஒட்டு கொண்டதில் சுதீப்புக்கும் பெரிய தில் இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

அமைதியாக அறிமுகமாகி டெரர் முகம்  காட்டும்போது சுதீப் நம் நரம்புகளை முறுக்கேற வைக்கிறார். இவன் இதை முடிப்பான் என்று ஒருவரை நம்பி விட்டால் அதற்கு மேல் அதை டேக் ஆஃப் ஆகிவிடும். அந்த வேலையை கச்சிதமாக சுகிப்பை வைத்து இயக்குனர் நிறைவேற்றி விடுவே, படம் ரெக்கை கட்டிப் பறக்கிறது.

வில்லன்களுக்காக உளவு பார்க்கும் கிரைம் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்தின் திருப்பங்களுக்கு கைகொடுத்திருக்கிறது. 

வில்லனாக நடித்திருக்கும் சுனில், பெண் காவலர்களாக நடித்திருக்கும் சம்யுக்தா ஹார்னட், சுக்ருத்வாக்லே, அமைச்சராக நடித்திருக்கும் சரத் லோகிதஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், இளவரசு, சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் உக்ரம் மஞ்சு என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும், ஏதோ ஒரு திருப்பங்கள் மூலம் ரசிகர்களை கவர்வதோடு, திரைக்கதையில் முக்கிய இடம் பிடித்து விடுகிறார்கள்.

இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் இசையில் பின்னணி இசையின் சத்தம் சற்று அதிகமாக இருந்தாலும், மாஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கூடுதல் வீரியத்தை கொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா ஒரு இரவில் நடக்கும் ஆக்‌ஷன் மாஸ் கதையில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான விசயங்களை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். 

படத்தொகுப்பாளர் எஸ்.ஆர்.கணேஷ் பாபு, படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைப்பதோடு, படம் முடியும் அவரை சீட் நுணியில் உட்கார்ந்து படம் பார்க்கும்படி காட்சிகளை மிக வேகமாகவும், பரபரப்பாகவும் தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, முன்னணி ஹீரோவுக்கான மாஸ் ஆக்‌ஷன் கதையை ஒரு இரவில் நடப்பது போல் வடிவமைத்திருந்தாலும், அதில் உணர்வுப்பூர்வமான சில விசயங்களையும் சேர்த்து படத்தை ரசிக்க வைக்கிறார்.

ஏற்கனவே நாம் பார்த்த ஒரு படத்தின் காப்பி, சில தேவையில்லாத காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது போன்றவை படத்தின் குறையாக இருந்தாலும், அந்த குறைகள் அனைத்தும் பலம் வாய்ந்த திரைக்கதையால் தடம் தெரியாமல் மறைந்து விடுகிறது