January 23, 2026
  • January 23, 2026
Breaking News
November 25, 2020

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்

By 0 1733 Views

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா. இவர் 1986 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மிகவும் துணை புரிந்தார். அதன் மூலம் உலகப் புகழையும் பெற்றார்.

எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக மதிக்கப்படும் மாரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அவர்.

இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

மாரடோனாவுக்கு வயது 60. பல முக்கிய உயிர்களை பலி வாங்கிய 2020ஆம் ஆண்டு நட்சத்திர கால்பந்து வீரரான மாரடோனா உயிரையும் பறித்துக் கொண்டது.

Maradona passed away

Maradona passed away