September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிவாஜி, கமல் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் நான் – விஜய் சேதுபதி (உருவாக்க வீடியோ)
July 18, 2018

சிவாஜி, கமல் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் நான் – விஜய் சேதுபதி (உருவாக்க வீடியோ)

By 0 1255 Views

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற சிறிய படத்தைத் தந்து பெரிய வெற்றியை அள்ளிய விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் இணைப்பில் மீண்டும் உருவாகும் புதிய முயற்சிப்படம் ‘சீதக்காதி’. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகவும் அமைகிறது.

கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். அதைப்பற்றி அவரே கூறும்போது, “இதில் நான் 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். ‘சீதக்காதி’ ஒரு ஆத்மார்த்தமான படம், அது ‘கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது…’ என்ற செய்தியைச் சொல்லும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்…

‘சீதக்காதி’ சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்குப் பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நான் நம்புகிறேன்..!” என்கிறார்.

அதுதானே உங்க ஸ்பெஷலே… விஜய்..?!

‘சீதக்காதி’யில் விஜய் சேதுபதி ஏற்கும் ‘அய்யா’ கேரக்டரின் உருவாக்க வீடியோ கீழே…