October 16, 2025
  • October 16, 2025
Breaking News
July 6, 2019

ஆச்சரியப்படுத்திய அருண்விஜய் – கார்த்திக் நரேன்

By 0 922 Views

‘லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க ‘மாஃபியா’ படத்தின் மிரட்டலான முதல் தோற்றம் ரசிகர்களை மகிழ வைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு எளிய சம்பிரதாய விழாவுடன் தொடங்கியது.

‘மாஃபியா’ படத்தின் மொத்த படப்பிடிப்பு நாட்கள் குறித்த செய்தி ஒன்றும் இருக்கிறது. இது குறித்து கார்த்திக் நரேன் கூறும்போது, “ஆம், நாங்கள் இன்று படப்பிடிப்பை தொடங்கி, அதை 37 நாட்கள் கால அட்டவணையில் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஸ்கிரிப்டை முடித்தவுடனேயே, அருண் விஜய் சார்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று என்னால் உணர முடிந்தது.

குறிப்பாக ‘தடம்’ பார்த்த பிறகு. எனினும், அவர் என் கதையை கேட்டு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எனக்குள் இருந்தது, ஏனெனில் பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அவர் உடனடியாக ஒரு ஒப்புதல் கொடுத்தது ஆச்சரியப்படுத்தியது. அது போலவே லைகா புரொடக்ஷன்ஸ், பல பெரிய படங்களை தயாரித்து வந்தாலும், எந்தவிதமான தலையீடும், கேள்விகளும் இன்றி எனக்கு முழு சுதந்திரம் அளித்தனர். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு நம்பிக்கைக்குரிய திரைப்படத்தை வழங்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்..!” என்றார்.

மற்ற நடிகர்கள் பற்றி அவர் கூறும்போது, “பிரசன்னா ஆஎற்கும் வேடம் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பிரியா பவானி சங்கரும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும், தோற்றத்திலும் நடிக்கிறார்..!” என்றார்.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.