August 31, 2025
  • August 31, 2025
Breaking News

காதல் மைனா வரிசையில் வர தயாராகும் மாயபிம்பம்

By on June 12, 2019 0 823 Views

ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’, ‘மைனா’ போன்ற பல படங்களை கூறலாம்.

அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் தான் ‘மாயபிம்பம்’ என்கிறார் அறிமுக இயக்குநர் சுரேந்தர். இப்படம் உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறதாம். உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குநர்.

இயக்குநருக்கு மட்டுமல்லாது நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் படம் என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தரமான யதார்த்த காதல் சினிமாவை படைத்திருக்கிறார்களாம்.

இப்படத்தின் படப்பிடிப்பை கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் நடத்தியிருக்கிறார்கள்.

ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறாரகள். கே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு ‘செல்ஃப் ஸ்டார்ட் ப்ரொடக்ஷன்’ சார்பில் தயாரித்துமிருக்கிறார். இப்படத்தை வி.டி. சினிமாஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.