July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குறிப்பிட்ட நாளுக்கு முன்பே சிம்பு ரெடியாகி மாநாடு தொடங்கியது
February 19, 2020

குறிப்பிட்ட நாளுக்கு முன்பே சிம்பு ரெடியாகி மாநாடு தொடங்கியது

By 0 1548 Views

“மாநாடு”  படம் பற்றி தமிழ் நல்லுலகுக்கு புதிதாக சொல்லத் தேவையில்லை.

அதில் ஒப்பந்தமான  நடிகர் சிம்பு தேவையான ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது.   சில பல நிறுத்தல் உயன்பாடுகளுக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று ஆரம்பிக்கவிருந்தது.

ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள்..?

தற்போது சிம்பு “எதுக்கு இன்னும் லேட் பண்றீங்க. நாளைக்கே படத்தை ஆரம்பிக்கிறோம்…” என்று அதிரடியாக கூறிவிட்டாராம். இதனால் ஆச்சரியமடைந்த “மாநாடு” படக்குழு இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை நாளை சென்னை மாநகரத்திலுள்ள ECR சாலையில் படமாக்கவுள்ளனர். இதனால் மாநாடு டீமும் சிம்பு ரசிகர் களும் உற்சாகமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்கள் இந்த ஷூட்டிங் நடந்து முடிந்தபின், பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஐம்பது நாட்கள் ஹைதராபாத் நகரத்திலுள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கப்போவதாக படக்குழு திட்டமிட்டு வருகிரது.

மேலும் இந்த படத்தை ஜூன் மாதத்தில் திரையிடத் திட்டமிட்டு வருகின்றனர்.

சிம்பு என்றால் வம்பு என்ற நிலை மாறி தெம்பு என்றாகட்டும்..!

மாநாடு தொடக்க விழா வில் பாரதிராஜா, கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள கீழே…

SAVE_20200219_101535

Image 1 of 3