May 14, 2021
  • May 14, 2021
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஹிப் ஹாப் ஆதிதான் என் சக்களத்தி குஷ்பு வாக்குமூலம்
February 19, 2020

ஹிப் ஹாப் ஆதிதான் என் சக்களத்தி குஷ்பு வாக்குமூலம்

By 0 281 Views
அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.
 
இதன் வெற்றி விழாவில் குஷ்பு உள்ளிட்டு நான் சிரித்தால் கலைஞர்கள அனைவரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் பேசியதிலிருந்து…

‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி –

“இப்படத்தின் வெற்றி தனிமனிதர் வெற்றியல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றி. ராணா, உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று அழைத்தார். ராணாவிடம் பொறுமையைக் கற்றுக் கொண்டேன். மொத்த படக்குழுவினரும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல நடத்தினார்கள்..!”

கதாநாயகி ஐஸ்வர்யா மேனன் –

“இயக்குநர் சுந்தர்.சி திறமைவாய்ந்த இயக்குநர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள். ஆதி பன்முக திறமை வாய்ந்தவர். இப்படத்தின் மூலம் அவர் நல்ல நண்பராகிவிட்டார். இப்படம் வெளியாகி இந்த சில நாட்களில் 7 முறை பார்த்துவிட்டேன். இப்படத்திற்கு கிடைத்த விசிலும், கைத்தட்டலும் ஆதியையே சாரும்..!”

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் –

“சுந்தர்.சி தயாரிப்பில் ‘தலைநகரம்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது இரண்டாவது படம். ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார் என்று சுந்தர்.சி என்னிடம் ‘கெக்க பெக்க’ குறும்படத்தை பார்க்க சொன்னார். பார்த்ததும் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன். அது இக்குறும்படத்தில் இல்லை. ஆனால், நாங்கள் ‘டில்லி பாபு’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். நான் தான் வில்லனா? என்றேன். இல்லை. ஆதி கதாநாயகன், அவருடைய சிரிப்புதான் வில்லன் என்றார். இந்த கதாபாத்திரத்தை போல நிஜ வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன்.

ஆதியைப் பார்க்கும்போது விஜயைப் பார்ப்பதுபோல இருக்கிறது.

புதுமுக இயக்குநர்களுடன் 9 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால், நடிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று இருக்கும் இளைஞர்கள் இரவில் தான் பணியாற்றுகிறார்கள்..!”

Naan Sirithaal Success Meet

Naan Sirithaal Success Meet

 
இயக்குநர் ராணா –

“ஆதி, சுந்தர்.சி. மற்றும் குஷ்பூ மூவரும் என் மீது வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது. கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து படம் இயக்குவது கணித ஆசிரியை அருகில் வைத்து தேர்வு எழுதுவது போல இருந்தது. முதல் படம் இயக்குகிறாய், கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று என்னை கே.எஸ்.ரவிக்குமார் ஊக்குவித்தார்..!”

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி –

“நான் பள்ளியில் படிக்கும்போது ‘ராப்’ பாடல் தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ‘ஹிப் ஹாப்’ பாடலையும் ரசிக்கிறார்கள். என்னைப் போலவே சுதந்திரமான கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களை எங்களது ஒவ்வொரு படங்களிலும் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கி வருகிறோம். அப்படிதான் யூடியூப்-ல் ராணாவைப் பார்த்து அழைத்து வந்தோம்.

 
அவர் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களையும் அழைத்து வந்தோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயக்குநராகும் திறமையுள்ளது. அதேபோல, ‘எரும சாணி’ விஜய்யையும் சென்னையில் வாய்ப்பு நிறைய இருக்கிறது வா என்று அழைத்தேன். இன்று ஒரு படத்தில் இயக்குநராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இது எதிர்காலத்திலும் தொடரும்..!”

நடிகை குஷ்பூ –

 
“அவ்னி மூவிஸ்’ என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. ஏனென்றால், எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸின் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். 
 
ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். ‘எனக்கு சக்களத்தி ஆதி’தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தார் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.
 
எங்களுக்கு கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறோம். அதன்பலனாக, விநியோகஸ்தர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் பூ வாசனை வருகிறது என்று கூறுகிறார்கள். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவது அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி..1″