தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அந்தப் படத்தில அவர் மேற்கொண்ய்ட புதிய முயற்சிகளை இங்கு விவரிக்கிறார்.
தர்மதுரை மாதிரியான கதை அல்ல மாமனிதன்… இது வேறு விதமான கதை..!
‘அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம்…’ என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்..
இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும், காயத்ரியின் நடிப்பாகட்டும் நிச்சயமாக இந்த இருவருக்கும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருது கிடைத்தே ஆகவேண்டும்.. அப்படி கிடைக்கவில்லை என்றால் அந்த தேசிய விருதுக்கே மரியாதை இல்லை என்றுதான் உறுதியாக சொல்வேன். அந்த அளவுக்கு மிக இயல்பான அற்புதமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்..!
இந்தப்படத்திலும் புதிய முயற்சி ஒன்றைக் கையாண்டுள்ளோம். படத்தில் குறிப்பிட்ட நான்கு காட்சிகளை மட்டும் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம். ஒவ்வொரு காட்சியும் சுமார் நான்கு நிமிடத்துக்கு குறையாத நீளம் கொண்டவை. அவற்றை ஒரே டேக்கில் படமாக்கி இருக்கிறோம். காரணம் அந்தக்காட்சிகளை அப்படி ஒரே ஷாட்டில் சொன்னால் ரொம்பவே பொருத்தமானதாக இருக்கும் என இயக்குநர் சீனு ராமசாமி விரும்பினார்.
இதை பல ஷாட்டுகளாக பிரித்து வழக்கம்போல ஏன் எடுக்கவேண்டும் ஒரே ஷாட்டில் எடுக்கலாமே என்று எனக்கு இந்த புதிய முயற்சியை பரீட்சித்து பார்க்க ஊக்கம் தந்தார். பக்காவான ரிகர்சல் பார்த்துவிட்டு சென்றதால் ஒரே டேக்கில் பிரமாதப்படுத்தி விட்டார்கள் விஜய்சேதுபதியும் காயத்ரியும்.
அப்படி இந்த காட்சியை படமாக்குவதற்காக பகலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அன்று இரவே பக்கத்தில் இருந்த இன்னொரு லொக்கேசனுக்கு மாறினோம். படக்குழுவினரும் எப்படியும் முதல் ஷாட்டே எட்டு மணிக்குத்தான் ஆரம்பிக்கும் நள்ளிரவில் தான் படப்பிடிப்பு முடியும் என அதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருந்தனர்.
ஆனால் ஏழரை மணிக்கு ஷாட் வைத்து கிட்டத்தட்ட எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பிவிட்டோம். நாங்கள் ஒரே ஷாட்டில் இந்த நான்கு நிமிட காட்சிகளை எடுக்கப்போகிறோம் என்பது எங்கள் நால்வரை தவிர யாருக்கும் தெரியாததால் படக்குழுவினருக்கு கூட இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது..!”
ஆக, ஒளிப்பதிவுக்கும் ஒரு தேசிய விருது சாத்தியம் இருக்கிறது..?!
Maamanithan Movie News
Related