நேற்று வெளியாகியிருக்க வேண்டிய விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழனை’ இன்றுதான் போராடி தியேட்டருக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்ஷன்ஸ். அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி…
அனைவருக்கும் வணக்கம்
கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம்
இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் திரு.சுந்தர் , திருமதி .பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்
இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் திரு.அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய *திரு. JSK*, திரு.தேணாண்டாள் முரளி , திரு H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்
இதுவரை இல்லாத அளவு இந்த படத்தை மிகப்பிரமாண்டமாக ரிலிஸ் செய்யலாம் என்று போராடிக்கொண்டிருக்கும் போதே , படத்திற்கு நெல்லையில் தடை , லிப்ராவிற்கு டெப்ஸிட் , இடையே திடீரென்று எங்கள் நாயகன் திரு. விஜய்சேதுபதி அவர்களின் என்றும் தீரா பிரச்சனை என்ற இண்டர்வியூ இவற்றிற்கிடையே எங்களுடைய ஒரே நோக்கம் படத்தை வெளிகொண்டுவருவது மட்டுமே
ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் எத்தனை இடைஞ்சல்கள் , கேலிகள் , அவமானங்கள் , புறக்கணிப்புகள் ஆனால் எது நடந்தாலும் இந்த லிப்ரா புரொடக்சன்ஸ் கொண்ட கருத்தில் மாறப்போவது இல்லை
ஒருத்தங்க மேல ஈசியா குற்றச்சாட்டை சொல்லிவிட்டு கேலிசெய்துவிட்டு போய்விடலாம் , ஆனா அவர்களுக்கான பதிலை காலம் நின்றுசொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது எங்களுக்கு, எங்களுடைய ஒரே நோக்கம் எடுத்த வேலையை ஒழுங்காக செய்து அதை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வது மட்டுமே அதை எப்போதும் லிப்ரா செய்துகொண்டுதான் இருக்கும்
நன்றி
இவன்
#LIBRAProduction