பக்கவாத சிகிச்சைமுறையில் உடல்நல பராமரிப்பு நிபுணர்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் ‘Mission Brain Attack’ என்ற சென்னை பிரிவைத் தொடங்கியுள்ளது…
சென்னை, அக்டோபர் 27, 2024: பக்கவாதத் தடுப்பு, உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் உடல்நலப் பராமரிப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு, கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியான MISSION BRAIN ATTACK ஐ இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் (ISA) தொடங்கியுள்ளது.
“ஒவ்வொருவரும் ஒருவருக்கு கற்றுக்கொடுங்கள்” “Each One Teach One” என்ற இந்த பிரச்சாரமானது, நாடு முழுவதும் பக்கவாத சிகிச்சையை மேம்படுத்துவதற்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வளங்களின் அவசரத் தேவையை வலியுறுத்துகின்ற வகையில் இந்தியா முழுவதும் பக்கவாத நோய்களின் அபாயகரமான அதிகரிப்பை நிவர்த்தி செய்கிறது.
இந்தியாவில் இறப்பு மற்றும் இயலாமைக்கான முக்கிய காரணங்களில், ஆண்டுதோறும் சுமார் 1.8 மில்லியன் மக்களை பாதிக்கின்ற பக்கவாதங்கள் ஒன்றாக இருக்கின்றன. இறப்புக்கான இரண்டாவது மிகவும் பொதுவான காரணமாகவும், இயலாமைக்கான மூன்றாவது முக்கிய காரணமாகவும், பக்கவாதம் நாட்டின் சுகாதார அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருப்பினும், பக்கவாத அறிகுறிகள் மற்றும் உடனடி சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. உடல்நலப் பராமரிப்பு வழங்குநர்களுக்கு பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் நோயாளி குணமாவதை மேம்படுத்த பயனுள்ள பராமரிப்பு நெறிமுறைகளை செயல்படுத்துவது குறித்த முக்கியமான பயிற்சியை வழங்குவது ஆகியவற்றின் மூலம் MISSION BRAIN ATTACK இதை நிவர்த்தி செய்ய முற்படுகிறது.
பக்கவாத சிகிச்சைக்கான விலையேறப்பெற்ற நேரம் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும். இந்த நேரத்திற்குள் உடனடி மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது பக்கவாதத்தின் விளைவை மாற்றியமைக்கமுடியும். இந்த MISSION BRAIN ATTACK முன்முயற்சியானது, பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல், பயனுள்ள சிகிச்சை நெறிமுறைகளை செயல்படுத்துதல் மற்றும் பக்கவாதத்தை அனுபவிக்கும் நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பை வழங்குதல் போன்றவை குறித்த முக்கியமான தகவல்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சியுடன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் தொழில்
நிபுணர்களை சித்தப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கருத்தரங்குகள், வெபினார்கள், நிகழ்நேர வழக்கு ஆய்வுகள் மற்றும் அதிநவீன ஆன்லைன் வளங்களுக்கான அணுகல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. பக்கவாத நிர்வகிப்பில் மிகச் சமீபத்திய சிறந்த நடைமுறைகளை இந்தியா முழுவதும் உள்ள உடல்நலப் பராமரிப்பு வழங்குநர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதிப்படுத்த இந்த கூறுகள் உதவும்.
“இந்த முயற்சி, கருத்தரங்குகள், வெபினார்கள், நிகழ்நேர வழக்கு ஆய்வுகள் மற்றும் ஆன்லைன் வளங்களுக்கான அணுகல் ஆகியவற்றின் விரிவான திட்டம் உள்ளடக்குகிறது. இந்தியாவில் பக்கவாத நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், உடனடி நடவடிக்கைகள் அவசியமானதாக இருக்கின்றன. மூளை பக்கவாதம் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மலிவு விலை கெதீட்டர் ஐ அறிமுகப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம், இது மூளை பக்கவாதம் தொடர்பான அறுவை சிகிச்சை செலவுகளை கணிசமாகக் குறைக்கும்” என்கிறார் நரம்பியல் நிபுணரும் ISA வின் தலைவருமான டாக்டர் நிர்மல் சூர்யா. “ஒரு நோயாளியின் குணமடைதல் மற்றும் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக பாதிக்கும் ஒரு மூளைத் தாக்குதல் ஏற்படும் போது அவர்கள் திறம்பட எதிர்வினையாற்றத் தேவையான திறன்களுடன் மருத்துவ நிபுணர்களை “MISSION BRAIN ATTACK மூலம் நாங்கள் சித்தப்படுத்துகின்றோம்.”
“பக்கவாதம் ஏற்பட்டால், உடனடி நடவடிக்கை அவசியமானதாக இருக்கிறது. நரம்பியல் நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் கண்டு, முதல் நான்கரை மணி நேரத்திற்குள் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பது, இறப்பு மற்றும் நீண்டகால இயலாமைகளைத் தடுப்பதில் முக்கியமானதாக இருக்கிறது. இந்தியாவில், ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒரு பக்கவாதம் ஏற்படுகிறது, மேலும் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பக்கவாதம் தொடர்பான மரணம் ஏற்படுகிறது.
நாட்டில் ஆண்டுதோறும் சுமார் +1,85,000 பக்கவாத வியாதிகள் ஏற்பட்டாலும், 28,000 த்ரோம்போலிசிஸ் நடைமுறைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரு பக்கவாதத்திற்கு சிகிச்சையளிப்பதில், ஆரம்ப சில மணிநேரங்களுக்குள், கூடிய விரைவில் நோயாளியை
மருத்துவமனையில் சேர்ப்பது இன்றியமையாததாகும். இது இரத்த ஓட்டக்குறைவினால் ஏற்படும் பக்கவாதத்தின் போது மூளையின் பாதிக்கப்பட்ட நரம்புகளில் உள்ள இரத்த உறைவைக் கரைக்கின்ற த்ரோம்போலிசிஸ் சிகிச்சையைத் தொடங்க மருத்துவர்களை அனுமதிக்கிறது. அறிகுறிகள் தோன்றிய முதல் சில மணிநேரங்களுக்குள் த்ரோம்போலிசிஸ் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க ஒரு கெதீட்டர் ஐப் பயன்படுத்தி உறைவை உடல் ரீதியாக அகற்றும் ஒரு செயல்முறையான மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி சிகிச்சை பக்கவாதம் ஏற்பட்ட 24 மணிநேரத்திற்குள் செய்யமுடியும்.
பக்கவாதம் என்பது ஒரு மாரடைப்பு போன்றது, இரண்டுமே இரத்த நாளங்களின் அடைப்பால் ஏற்படுகின்றன, பக்கவாதத்தில் மட்டுமே, மூளை பாதிக்கப்படுகிறது. ஒரு மாரடைப்பு ஏற்பட்டால், நெஞ்சுவலியை உணர்ந்தவுடன் மக்கள் உடனடியாக சிகிச்சையை நாடுகின்றனர். இருப்பினும், பலர் பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள் அல்லது அறியாதவர்களாக இருக்கிறார்கள்” என்று சென்னை மெர்குரி மருத்துவமனை டாக்டர் தீபக் அர்ஜுனதாஸ் கூறுகிறார்.
“திடீரென்று சமநிலை இழப்பு, மங்கலான பார்வை, முகத்தின் உணர்வின்மை முகம் தொங்கிப்போகுதல், உடலின் கீழ் மற்றும் மேல் மூட்டுகள் அல்லது உடலின் ஒரு பக்கத்தில் பலவீனம் அல்லது உணர்வின்மை மற்றும் பேசுவதில் சிரமம் ஆகியவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும்” என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனை இன் டாக்டர் முத்துக்குமார் P. கூறினார்.