December 12, 2024
  • December 12, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது
November 13, 2024

TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது

By 0 148 Views

வலுவான வளர்ச்சியின் மத்தியில் TATA AIG நிறுவனம் புதிய கூடுதல் பலன்களுடன் தமிழ்நாடு உடல்நல காப்பீட்டு துறையை வலுப்படுத்துகிறது

• 31 மாவட்டங்களில் ஒரு வலுவான இருப்புடன் மாநிலம் முழுவதும் 1000 மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க்.

• 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சுகாதாரப் பிரிவில் 250% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

• 85% தொழில் சராசரிக்கு எதிராக நிதியாண்டு 24 இல் 90.16% இன் மிக உயர்ந்த கோரல் தீர்வு (முடித்து வைக்கப்பட்ட கோரல் தொகை).

சென்னை, நவம்பர் 12, 2024: இந்தியாவின் ஒரு முன்னணி பொதுக் காப்பீட்டு வழங்குநரான TATA AIG ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் Mental Wellbeing, Empower Her, OPD Care, CanCare மற்றும் Flexi Shield ஆகிய ஐந்து சிறப்பு கூடுதல் பலன்களுடன் தமிழ்நாட்டில் தனது உடல்நலக் காப்பீட்டு வழங்கல்களை பலப்படுத்துகிறது. இந்த கூடுதல் பலன்கள் குறிப்பாக இந்த மாநிலத்தின் குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட மற்றும் மாறுபட்ட உடல்நலத் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன, மனநலம், பெண்களின் ஆரோக்கியம், புற்றுநோய் சிகிச்சை மற்றும் வழக்கமான மருத்துவ செலவுகள் போன்ற பகுதிகளில் விரிவான பாதுகாப்பை வழங்குகிறது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் முக்கிய கிளைகளுடன் TATA AIG தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் ஒரு வலுவான இருப்பை நிறுவியுள்ளது. இந்த நிறுவனத்தின் விரிவான நெட்வொர்க் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பணமில்லா சிகிச்சைக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்கின்ற 1000 க்கும் அதிகமான மருத்துவமனைகளை உள்ளடக்குகிறது. முகவர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஒரு நன்கு நிறுவப்பட்ட நெட்வொர்க் மூலம் இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் தரமான சுகாதார காப்பீட்டு தீர்வுகளை கொண்டு வருகிறது.

இந்த செயல்திறன் மாநிலத்தில் தரமான காப்பீட்டு தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை எடுத்துக்காட்டுகிறது, இது சுகாதார காப்பீட்டின் அடிப்படையில் வெறும் 5.35% என்ற அளவில் குறைவாகவே ஊடுருவியுள்ளது. TATA AIG ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களிடையே புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகியவை மிகவும் அடிக்கடி பதிவாகும் நாள்பட்ட நிலைகளில் ஒன்றாக உள்ளது. நாள்பட்ட நோய் உரிமைகோரல்களில் அதிக பங்கு, ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களிடையே நாள்பட்ட நோய் உரிமைகோரல்களின் அதிக சதவீதத்தைக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க போக்குடன், 46-55 வயதினரிடமிருந்து வருகிறது.

நிதியாண்டு 24 இல் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த உரிமைகோரல் தீர்வு 90.16% (முடிக்கப்பட்ட உரிமைகோரல் தொகை ) தொழில்துறை சராசரியான 85% ஐ விட கணிசமாக அதிகமாக உள்ளது, இது பயனுள்ள மற்றும் தொந்தரவு இல்லாத சேவைகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்-முதல் அணுகுமுறை மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் ஆகியவை 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அதன் உடல்நலக் காப்பீட்டு வணிகத்தில் 250% வளர்ச்சிக்கு வழிவகுத்தன.

மூத்த செயல் துணைத் தலைவர் மற்றும் முகமை தலைவரான பிரதிக் குப்தா, “தமிழ்நாடு அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் அனைவருக்கும் அணுகக்கூடியதான தரமான காப்பீட்டை வழங்குவதில் TATA AIG உறுதியாக உள்ளது. இங்கு எங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எங்களின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்-முதல் அணுகுமுறைக்கு ஒரு சான்றாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் உயர்மட்ட, வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு தீர்வுகளை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.”என்று கூறினார்

வாடிக்கையாளர்களுக்கு முழுமையான, உயர்தர சுகாதார காப்பீட்டு கவரேஜ் கிடைப்பதை உறுதி செய்கின்ற கண்டுபிடிப்புகளில் அதன் தொடர்ச்சியான கவனம் செலுத்துதல் மூலம், TATA AIG தமிழ்நாட்டில் தனது இருப்பை விரிவுபடுத்தத் தயாராக உள்ளது.

மேலும் தகவலுக்கு, www.tataaig.com இணையத்தளத்தைப் பார்வையிடவும்

மீடியா கேள்விகளுக்கு தயவுசெய்து அணுகவும்:

ராசி மகேஸ்வரி

Corporate.communications@tataaig.com

சித்தார்த் சிங்

siddharth.singh@adfactorspr.com