July 9, 2025
  • July 9, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடனம் ஆடும் போது வழுக்கி விழுந்த லட்சுமிமேனன் வைரல் வீடியோ
July 17, 2020

நடனம் ஆடும் போது வழுக்கி விழுந்த லட்சுமிமேனன் வைரல் வீடியோ

By 0 630 Views

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இவர் நடித்த படங்களை விட விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்டதிலேயே அதிகமாக பிரபலம் ஆனார்.

ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் போதே நடிக்க வந்து விட்டதால் இடையிடையே பரிட்சை எழுதப் போகிறேன் என்று கிளம்பி கேரளா போய் விடும் வழக்கம் உள்ள அவர் கடைசியாக பரீட்சை எழுத போனதோடு தமிழுக்கு வரவே இல்லை.

இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான பிஜி முத்தையா கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து எடுக்கப் போகும் புதிய படத்தில் லட்சுமி மேனனை நாயகியாக ஒப்பந்தம் செய்ததாக சில மாதங்களுக்கு முன் வந்த தகவல்கள் கூறின.

ஆனால் அதன் பிறகு அந்த சம்பவம் பற்றி எந்தப் பேச்சும் செய்தியும் இல்லை.

இந்நிலையில் தன் வீட்டில் நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது லட்சுமி மேனன் வழுக்கி விழுந்த வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வழிக்கு விழுந்ததற்கு எல்லாமா வீடியோ போடுவார்கள்..? விஷயம் அதுவல்ல ஒரு நடிகை வழுக்கி விழுந்ததுதான் செய்தியின் சுவாரசியம். கீழே லட்சுமிமேனன் வழுக்கி விழுந்த வீடியோ…