சர்கார் கதை ஏற்படுத்திய பரபரப்பில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்கத் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி முடிவுகள் அவர் மீதான நன்மதிப்பை உயர்த்தின. கதைக்கு சொந்தம் கொண்டாடிய வருண் ராஜேந்திரன் நீதி மன்றத்தை அணுகி சாதகமான சமரசத்துக்கு வர, பாக்யராஜின் உறுதிதான் மூலகாரணமாக இருந்தது.
இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்கத் தலைவர் பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ். நான் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படாமல் நேரடியாக தலைவர் பதவிக்கு வந்தவன். நேரடியாக தலைவர் ஆனவர்கள் ராஜினாமா செய்வதுதான் முறை. அப்படி தேர்வான மற்றவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்…” என்ற கே.பாக்யராஜ் மேலும் கூறியது…
“சர்கார் பட விவகாரத்தில் நான் பல அசௌகரியங்களை சந்தித்தேன். அது நேரடியாகத் தலைவரானதால் ஏற்பட்டது.
படத்தின் கதையை வெளியே சொல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டேன். ஏ.ஆர்.முருகதாஸிடம் நான் கெஞ்சிக் கேட்டும் அவர் உடன்பாட்டுக்கு வராததால் அந்த நிலைமை எனக்கு ஏற்பட்டது. அதற்காக ‘சர்கார்’ தயாரிப்பாளர்கள் சன் பிக்சர்ஸிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர சங்க விதிகளில் நிறைய மாற்றம் செய்ய வேண்டியதிருக்கிறது. இப்போது சங்கத்துக்குத் தெரிதல் வீண் செலவு என் கிறார்கள். சங்கமே வீணாகப் போவதைவிட செலவு ஒன்றும் பெரிதில்லை.
தேர்தல் நடந்தால் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன்.
ஒரு எழுத்தாளனுக்கு நியாயம் கிடைக்க வைத்ததை ஒரு சங்கத் தலைவராக பெருமைப்படுகிறேன்.!”
கே.பாக்யராஜின் ராஜினாமா அதிர்ச்சி அலைகளை கோலிவுட்டில் உருவாக்கியிருக்கிறது. இதன் பின்னணி விரைவில் வெளியாகும்..!