“ஆர்ட் பை ஹார்ட்” என்ற ஒவியப்போட்டியுடன்
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
உலக இதய தினம் 2024ஐக் கொண்டாடுகிறது..!
சென்னை, 29 செப்டம்பர் 2024: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, செப்டம்பர் 29, 2024 அன்று தேனாம்பேட்டை டெக்காத்லான்-ராமி வணிக வளாகத்தில், “ஆர்ட் பை ஹார்ட்” என்ற நிகழ்வை நடத்தியது.
இதற்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். படைப்பாற்றலை வளர்ப்பது மற்றும் இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆர்வமிக்க இந்தப் போட்டியில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
பல்வேறு வயதினருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஓவியப் போட்டியுடன் CPR/BLS பயிற்சி, மவுனமொழி நாடகம் மற்றும் விளையாட்டுகள் ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்தின. காவேரி மருத்துவமனை இதய ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சமூகத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை ஊக்குவிப்பதிலும் புதுமையான அணுகுமுறைகளை கடைப்பிடிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட பிரலப ஓவியர் கலைமாமணி திரு. டிராஸ்கி மருது அவர்கள் பேசுகையில், “காவேரி மருத்துவமனையின் இந்த அற்புதமான முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இந்தப் போட்டியானது படைப்பாற்றலை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது சமூகத்தில் முக்கியமாக இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத் தையும் வலியுறுத்துகிறது.
கலையின் மூலம், இதய ஆரோக்கியம் பற்றிய முக்கியமான தகவல்களை சமூகத்திற்கு கொண்டு செல்லமுடியும் என்றும், இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “சமீப காலமாக உலகளவில் இதய நோய்களின் சுமை அதிகரித்து வருகிறது, மேலும் பல இளைஞர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதை காண்கிறோம்.
வாழ்க்கை முறையில் மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற சில ஆபத்து காரணிகள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உலக இதய தினத்தில், தனிநபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தி, அவர்களின் இதயத்தைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை கலை வழியாக ஏற்படுத்தும் முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!” என்று அவர் கூறினார்.