January 5, 2026
  • January 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் தள்ளிப் போகும் காட்டேரி
December 23, 2020

கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் தள்ளிப் போகும் காட்டேரி

By 0 693 Views

நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாக இருந்த காட்டேரி திரைப்படம் தள்ளிப் போவதாக படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

அதற்கு காரணம் கொரோனா பரவலின் இரண்டாவது அலை நாடெங்கிலும் பரவி வருவதாக வரும் குழப்பமான செய்திகளை அடுத்து இந்நிறுவனம் இப்படி ஒரு முடிவை மேற்கொண்டதாக அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடல்கள், டீஸர், டிரைலர் என்று அனைத்தும் வெளியான நிலையில் இப்படி படம் தள்ளிப் போவது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் சமூக நலன் கருதி இப்படி ஒரு தீர்க்கமான முடிவை தயாரிப்பாளர்கள் தரப்பில்  எடுத்திருக்கிறார்கள்.

ஸ்டுடியோ கிரீன் வெளியிடும் பத்திரிகை செய்தி கீழே…