August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அசுரன் வசன நீக்கம் வெற்றிமாறனுக்கு கருணாஸ் நன்றி
October 6, 2019

அசுரன் வசன நீக்கம் வெற்றிமாறனுக்கு கருணாஸ் நன்றி

By 0 1013 Views
அசுரன் திரைப்படத்தில் முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவு படுத்தும் வசனத்தை உடனடி யாக நீக்க கோரி இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் எம்.எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை வைத்தார். உடனடியாக அந்த குறிப்பிட்ட வசனத்தை நீக்கினார் இயக்குநர் வெற்றிமாறன்.
 
இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
 
‘கலைப்புலி தாணு’ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வெளிவந்துள்ள  ‘அசுரன்’ திரைப்படத்தில்  “ஆண்டபரம்பரை நாங்கதான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக் கிட்டேருந்து எங்களுக்கு எடம் வந்ததா..?” என்ற வசனம் வருமிடத்தில் எதிர் தரப்பினர் பேசும் உரையாடலில் “எத்தனை நாளாட சொல்லிக் கிட்டே இருப்பீங்க ஆண்ட பரம்பரைன்னு..?”  என்று  முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இக்காட்சி வழியாக வரும் உரையாடல் அமைந்திருக்கிறது. 
 
மேற்கண்ட திரைப்பட வசனம் எங்கள் சமூக மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதால் இந்த வசனத்தை நீக்குமாறு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.  எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் உடனடியாக நீக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனுக்கும் அசுரன் படக் குழுவினருக்கும் எமது மனமார்ந்த நன்றியை முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்..!”