பிரமாண்டத் தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா நிறுவனத்தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா நடித்திருக்கும் படம் ‘காப்பான்.’
நாயகன் சூர்யாவுடன் இயக்குநர் கே.வி.ஆனந்த், நாயகி சாயிஷா, ஆர்யா, தலைவாசல் விஜய், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘காப்பான்’ பத்திரிகையாளர் தயாரிப்பில் சூர்யா பேசியதிலிருந்து…
புகழ் வெளிச்சம் படாத ஹீரோக்கள் நிறையபேர் இந்த சமுதாயத்துல இருக்காங்க. அவங்களைப் பத்திப் படமெடுத்துக் காட்டாணும்னு எனக்கு ஆசை உண்டு. அப்படி ஒரு படம்தான் இந்த காப்பான். இதோட அளவு ரொம்பப் பெரிசு. பட்ஜெட் ஆகட்டும், உஃஜைப்பு ஆகட்டும். அதுக்கான களத்தை லைக்கா அழகா அமைச்சுக் கொடுத்துச்சு. அதுக்காக சுபாஸ்கரன் சாருக்கும், அவரோட க்ழுவினருக்கும் நான் நன்றி சொல்லிக்கறேன்.
கே.வி.ஆனந்த் சாரைப் பத்தி சொல்லும்போது அவர் எப்போதும் நிறைய யோசிகிறவர். ஒரு உண்மைக்கதையை சொல்லும்போது அதில் என்டர்டெயின்மென்ட்டை எவ்வளவு எப்படி சேக்கணும்கிறதுல கவனமா இருப்பார். இந்தப்படத்துல அவ்வளவு விஷய்ங்கள் சொல்லியிருக்கார். அது அத்தனையும் சொல்லிட முடியுமான்னு இருந்தது எனக்கு. ஆனா, அதைச் சரியா சொல்லிட்டார் அவர். அதுக்குத் துணையா இருந்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர் சார். அவர் எழுத்து எங்க வேலையைக் குறைச்சது.
இந்தப்படத்தை அவர் இன்னொரு நடிகருக்கு எழுதியிருந்தார். ஆனா, அது எங்கிட்ட வந்து சேர்ந்தது. என் வாழ்க்கையில எப்பவும் எனக்கு ஸ்பெஷலா அமைஞ்சது இன்னொருத்தருக்கு எழுதிய விஷயம் எங்கிட்ட வந்து சேர்ந்த படங்கள்தான்.
‘காப்பன்’ல இன்னொரு பவர்ஃபுல்லான ரோல். இந்தியா முழுமையும் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய அந்த ரோலை யார் பண்ணப்போறாங்கன்னு இருந்தப்ப அதுல் வந்து சேர்ந்தார் மோகன்லால் சார். அவ்வளவு பெரிய நடிகர், அந்தச் சுமையை நம்மேல ஏத்திவிடாம நான் ஜெகங்கிட்ட, ஆர்யாகிட்ட எப்படிப் பேசிப் பழக முடியுமோ அப்படியே லால் சார் கூடயும் பழக முடிஞ்சது.
நாமெல்லாம் நிறைய நடிப்போம். ஆனா, அவர் நடிக்கிறதே தெரியாது. அவர் அப்படியே அந்தக் கேரக்டரா இருகார். அது மூளைக்கூள்ள நடக்கிற மேஜிக். அவர்கிட்டே இருந்து நடிப்பைக் கத்துக்கவே முடியாது. அது அவருக்குள்ளே இருக்கு. எனக்கு ஒரு லைஃப் டைம் நட்பு அவரோட இந்தப் படத்தால கிடைச்சது.
சாயிஷாவோட சின்சியாரிட்டி பத்தி சொல்லணும். அவங்க தமிழ் கத்துக்கிட்டு பேசறது அவ்வளவு சிலபம் இல்லை. எனக்கு ஹைதராபாத் போனா ரெண்டு வார்த்தை தெலுங்கில பேசறதுக்கு அவ்வளவு சிரத்தை தேவைப்படும். அவங்ககிட்ட அதுக்கான சின்சியாரிட்டி இருக்கு.
இந்தப்படத்துல ஆர்யா வந்தது ஒரு ஆச்சரியமான விஷயம். முதல் நாள் லண்டன் ஷூட்டிங்குக்கு என்னோடவும், லால் சார் கூடவும் நடிக்க வேண்டிய ஒரு நடிகரால வர முடியலை. முதல் நாள் ஷூட்டிங்கே தடைப்படுமோன்னு ஆச்சு. வேற யார் யாரையோ யோசிச்சு இவர்கிட்ட கேட்டோம். வர முடியுமான்னு. வேற யோசனையே இல்லம, வேற எல்லா வேலையையும் விட்டுட்டு எங்க மேல நம்பிக்கை வச்சு ஒரு நாள்ள லண்லன் வந்து சேர்ந்தார். அது சாத்தியமே இல்லை. அந்த நம்பிக்கைக்கு நன்றி..!
கடைசியா நான் என் தம்பி தங்கைகள் கிட்ட கேட்டுக்கிறது…. ஒரே நாள்ள 10,000 பேரை ரத்ததானம் கொடுக்க வச்சிருக்கீங்க. அது எனக்குப் பெருமையா இருக்கு. அதேபோல இன்னைக்கு நாட்ல என்ன நந்திருக்குன்னு நமக்குத் தெரியும். அதனால எனக்குக் கட் அவுட் யாரும் வைக்க வேண்டாம். அப்படிதான் மக்களைக் கூப்பிடணும்னு இல்லை. அந்த செலவை ஒரு பள்ளிக்கோ, மக்களின் தேவைக்கோ பயன்படுத்த முடியும்..!”