கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தைத் திரையிடக் கூடாதென்று சில அமைப்புகள் கோரி வரும் நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்..
கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி ரஜினி, ‘‘காலா படத்துக்கான எதிர்ப்பைப் பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன். திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்..!” என்றார்.
ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் கூறுகையில், ‘‘இந்தப் பிரச்சினையில் நான் மக்கள் முடிவை ஆதரிப்பேன்..!’’ என்றதுடன் “கடந்த 2016-ம் ஆண்டு ‘நாகர் காவு-2’ ஏன்ற கன்னட படத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்தபோது சென்னை போலீஸ் கமிஷனர் படத்தை வெளியிடக்கூடாது என்று தடுத்துவிட்டார். அப்போது ரஜினிகாந்த் எங்கே போனார்..?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
இது பற்றி ரஜினி அண்ணன் சத்திய நாராயணா கூறுகையில், ‘‘காலா படத்தை கர்நாடக மக்கள் எதிர்க்கவில்லை. கர்நாடகத்தில் ரிலீஸ் ஆகாவிட்டாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் படம் வெளியாகும்..!’’ என்றார்.