தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு அணிக்கு தலைமை தாங்குகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார்.
அதற்காக கோவை தொடங்கி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தில் கமல்ஹாசன் பேசிய போது, “நடிப்பை விட்டு அரசியலுக்கு வந்துள்ளதால் எனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றி நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நன்றாக வாழவேண்டும் என நினைத்துதான் அரசியலுக்கு வந்துள்ளேன்…” என்றார்.