சகல கலா வல்லவர் என்ற பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவர் இந்திய சினிமாவில் என்றால் அது கமல் ஒருவர்தான். நடனத்திலும் சரி, பாடுவதிலும் சரி நுணுக்கமாகச் செய்வதில் வல்லவர்.
அவரது பாடும் திறமை பற்றி இசைஞானி இளையராஜாவே பலமுறை புகழ்ந்திருக்கிறார். அவரைத தன் இசையிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் கூட பாடவைத்து ரசிப்பார் இசைஞானி.
சில தினங்களுக்கு முன் கமலின் அண்ணன் சாருஹாசனின் 90வது வயது நிறைவை ஒட்டி அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்ட கமல், தன் ‘குணா’ படத்தின் ‘பார்த்த விழி பார்த்தபடி…’ பாடலை தன் குரலெடுத்து கர்நாடக சங்கீதத்தில் பாடி அசத்தினார். தாளமும் அவரே போட்டுக்கொண்டது கூடுத சிறப்பு.
அந்த வீடியோவின் சிறு காட்சி கீழே…
Media error: Format(s) not supported or source(s) not found
Download File: http://slategrey-eland-326968.hostingersite.com/wp-content/uploads/2020/01/VID-20200106-WA0026.mp4?_=1