January 23, 2026
  • January 23, 2026
Breaking News
February 21, 2022

அன்பு செழியன் மகள் சுஷ்மிதா – சரண் திருமணத்தில் கமல் ரஜினி நேரில் வாழ்த்து

By 0 1907 Views

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. 

மணமகள் சுஷ்மிதா MBA – மணமகன் R.சரண் MBA  இருவரையும்,

தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய சிினிமா பிரபலங்களுடன்,  அரசியல் பிரமுகர்கள்…

தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ், ஆகியோர்.. 

நேரில் ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தனர்.