கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
சிகிச்சை ஆரம்பித்த சில தினங்களில் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உயிர்காக்கும் உபகரணங்களின் துணையுடன் மட்டுமே அவரால் சுவாசிக்க முடிந்த நிலையில் திரையுலகம், பொதுமக்கள் என்று அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்தவாரம் எழுந்து உட்காரவும் உணவு உட்கொள்ளவும் பிசியோதெரபி பயிற்சிகளை மேற்கொள்ளவம் அவரால் முடிந்தது.
ஆயினும் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடனேயே அவர் சுவாசித்து வந்தார. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்திப்பதாக மருத்துவமனையில் இருந்து வெளிவந்த அறிக்கை கூறுகிறது.
இதைத்தொடர்ந்து எஸ்பிபி யின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் எம்ஜிஎம் மருத்துவமனை சென்று எஸ் பி பாலசுப்ரமணியத்தை பார்த்து வந்தார்.
அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர், “உயிர் காக்கும் கருவிகளுடன் சுவாசித்துக் கொண்டிருக்கும் எஸ் பி பி நல்ல உடல் நிலையில் இருக்கிறார் என்று கூற முடியாது.
அதனால் அவரவர் நம்பிக்கையின்படி பிரார்த்தனை செய்து வருகிறார்கள்…” என்று கூறிவிட்டு காரில் சென்றார்.
பின்னடைவில் இருக்கும் எஸ்பிபியின் உடல்நிலை நாளை முதல் நல்ல முன்னேற்றம் காண்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கமல் பத்திரிகையாளர்களிடம் பேசிய வீடியோ கீழே…