July 31, 2026
  • July 31, 2026
Breaking News
March 6, 2019

பெண்களை இழிவு படுத்தாமல் பெருமைப்படுத்தும் படம்

By 0 1103 Views

காலத்துக்குக் காலம் முன்னணி நடிகைகளுக்கு காக்கிச் சட்டை போட்டுவிட்டு ஒரு போலீஸ் ஸ்டோரி வந்து கொண்டிருக்கும். இந்த சீசனில் நந்திதா ஸ்வேதாவை வைத்து ‘ஐபிசி 376’ என்று ஒரு போலீஸ்ஸ்டோரி தயாராகிறது. இது த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதையைக் கொண்டதாம்.

நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி மேற்கொள்வதுடன் படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் படத்தை இயக்குகிறார். தகராறு, அண்ணாத்துரை படங்களின் ஒளிப்பதிவாளர் கே. தில்ராஜ் ஒளிப்பதிவையும், கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் ஆர். நிர்மல் படத் தொகுப்பையும் கவனிக்கிறார்கள்.

“இது ஹீரோக்கள் பண்ண வேண்டிய, ஆனால் அவர்களால் பண்ண முடியாத கதை. இப்ப சமூக வலைதளங்கள்தான் பரபரப்பா இயங்கிக்கிட்டிருக்காங்க.டைட்டிலை வலைதளத்தில் தேடும்போதே இது எது சம்பந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள். ஆனால் என்ன கதை என்பதை யூகிக்க முடியாது. பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்கள் கொண்டாட வேண்டிய படமாக ‘ஐபிசி 376’ இருக்கும்..!” என்கிறார் இயக்குநர்.

பிரபல விநியோகஸ்தடரான படத்தின் தயாரிப்பாளர் எஸ். பிரபாகர் 96, ஜூங்கா, பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர். டிஸ்ட்ரிபியூட்டர் மற்றுமல்லாது எக்ஸிபிட்டரும்கூட. பல தியேட்டர்களை நடத்தி வருகிறார். அவர் முதல்முறையாக தமிழ் தெலுங்கில் தயாரிக்கும் பைலிங்குவல் படம் இது.

வாழ்த்தி வரவேற்கலாம்..!