November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • உலகத்தரம் வாய்ந்த FEFDY பாடத்திட்டம் அறிமுகம்
April 27, 2022

உலகத்தரம் வாய்ந்த FEFDY பாடத்திட்டம் அறிமுகம்

By 0 798 Views

அனைவருக்கும் வணக்கம்!

கேடில் விழுச்செல்வமான கல்வியைக் கற்பிக்கும் மேன்மையான பயணத்தின் மைல் கல்லாக VKAN-V Solution Private Limited, 27.04.2022 அன்று மாலை 6 மணி அளவில், மழலையர் பிரிவிற்கான FEFDY பாடத்திட்டம் வெளியிட உள்ளது.

இந்நிகழ்வின் சிறப்பு விருத்தினர்களாக மேன்மைமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

VKAN-V Solutions Private Limited, Chennai, India எனும் மென்பொருள் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படும் இந்த FEFDY பாடத்திட்டம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமைப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

உலகத்தரம் வாய்ந்த கற்றல் கற்பித்தல் இரண்டிலும் மேம்பட்ட பாடத்திட்டத்தையும் கற்றல் துணைக்கருவிகளையும் FEFDY பாடத்திட்டமாக VKAN-V உருவாக்கியுள்ளது.

* FEFDY பாடத்திட்டம் மூன்று முதல் பத்து வயது வரையிலான மாணவர்களுக்கானது

* FEFDY பாடத்திட்டம் மழலையர் பிரிவு கல்வி நிலைகளான நிலை -1 (PKG), நிலை – 2 (LKG) மற்றும் நிலை – 3 (UKG) ஆகியவற்றைச் சிறப்பாகக் கற்க துணைபுரிகிறது. இப்பாடப் புத்தகங்கள் பொதுவான சமூக விழிப்புணர்வு. ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

* பொதுவான சமூக விழிப்புணர்வு குறித்த புத்தகம். வாழ்வியல் திறன்களை மேம்படுத்துகிறது, மற்றும் அவர்களது சமூக அக்கறை, இயற்கையின் மீது நேசம், சுய ஆளுமைத்திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

* ஆங்கிலம் 26 எழுத்துகள் மற்றும் 44 ஒலிகளை சிறப்பாகக் கற்றறியத் தேவையான ஒருங்கணைந்த, உரையாடல் தன்மைமிக்க மற்றும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக உள்ளது.

* கணிதப்புத்தகங்கள் எண்ணிக்கைகள் அறிதல், வரிசைப்படுத்துதல், அளவிடுதல் போன்ற எண்ணியல் திறன்கலை மேம்பட்ட நிலையில் உருவாக்குகிறது, எண்ணியலை வித்தியாசமான முறையில் குழந்தைகளை ஈர்க்கக்கூடிய செயல்பாடுகளுடன் கற்பிக்கக்கூடியதாக உள்ளது.

* எட்டாயிரத்திற்கும் மேலான சிறப்பான கல்வித்துணை செயல்பாடுகளுடன் திறன் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

* eVak புத்தகம் – இது காட்சி, செவிவழி மற்றும் இயக்கவியல் கற்றலை இணைக்கும் ஒரு மின்னணு புத்தகமாகும்

* சிறந்த அறிவியல் துணைச் சாதனமாக அமைந்து சோதித்தறியும் அனுபவக் கற்றலை ஏற்படுத்துகிறது.

FEFDY என்பது தொழில்நுட்ப அடிப்படையிலான இயங்கலை (Online) மற்றும் இயல்பான நிலை கற்பித்தல் – கற்றல் நடைமுறைகளைக் கொண்ட பள்ளிகளை மிகவும் திறம்பட செயல்படவும் மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தவும் உதவும் ஒரு கல்வியியல் தொழில்நுட்பத் (ED-TEC) தீர்வாகும் 

இப்பாடத்திட்டமானது இயற்கையைப் போற்றுவதன் மூலமும் மனித விழுமியங்களைப் புரிந்து கொள்ளத் தேவையான அர்த்தமுள்ள கல்வியை வழங்குகிறது. விளையாட்டு முறையில் கலந்துரையாடும் தன்மையுடன் அமைந்துள்ள கற்றல் செயல்பாடுகள் குழந்தைகள் விரைவாகப் புரிந்து கொள்ளவும் திறமையாகக் கற்றுக்கொள்ளவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.

VKAN-V நிறுவனங்களுக்கான கற்பித்தல் மேலாண்மையையும் மற்றும் நிறுவன வளத்திற்கான திட்டமிடுதலையும் மேம்படுத்துகிறது.

பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- 

* இணையதலைமுறையினருக்கான புதிய கற்றல் வழிமுறைகளை ஏறெடுக்கியது

* வாழ்வியல் திறன்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது

* சமூக மாற்றத்திற்கேற்ற மற்றும் வளர்ச்சிக்கேற்ற கருத்தாக்கங்கள் உள்ளது.

* நுண்ணறிவைத்தூண்டக்கூடிய மற்றும் கவனத்தைத் தூண்டக்கூடிய கற்றல்

* தொழில்சார்ந்த அணுகுமுறைகளுக்கேற்ற கற்றல்

* இயற்கையுடனான புரிந்துணர்வு

* கலந்துரையாடும் செயல்பாடுகள் நிறைந்த கற்றல் தளம் 

* சமூகமையப்படுத்தப்பட்ட கல்வித்திட்டம்

* உயர் ஒழுங்கு சிந்தனைத்திறன்கள் மீது கவனம் செலுத்துதல்

* திறன் அடிப்படையிலான நுண் கற்றல் மேம்பாடு

FEFDY பாடத்திட்டமானது மனிதநேயத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையேயான சரியான சமநிலையை உறுதி செய்யும் பாலமாக உள்ளது.

எங்கள் விருந்தினர்கள்

திரு. எஸ். ஏ. சந்திரசேகர்

திரு. ஈரோடு மகேஷ் 

திரு. தமன் (நடிகர்)

திரு. திண்டுக்கல் லியோனி (தலைவர்)

டாக்டர். ராதாகிருஷ்ணன் IAS, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர்

டி.எம்.டி இன்னசெடை திவ்யா IAS, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர்

திரு. நவாப்சாதா முகமது ஆசிப் அலி, திவான் (ஆற்காடு இளவரசர்)

டாக்டர் மரியசீனா ஜான்சன், சத்யபாமா பல்கலைக் கழகத்தின் வேந்தர்