May 2, 2024
  • May 2, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 2022 ல் இந்தியாவின் மிக பிரபலமான நட்சத்திரங்களை அறிவித்த ஐ.எம்.டி.பி
December 7, 2022

2022 ல் இந்தியாவின் மிக பிரபலமான நட்சத்திரங்களை அறிவித்த ஐ.எம்.டி.பி

By 0 504 Views
  • உலக சூப்பர்ஸ்டார் தனுஷ் அவர்கள் ஐ.எம்.டி.பியின் பட்டியலில் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரமாக உள்ளார், அவரைத் தொடர்ந்து அலியா பட் மற்றும் ஐஷ்வர்யா ராய் பச்சன் உள்ளனர்
  • இந்த தரநிலை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஐ.எம்.டி.பி வாடிக்கையாளர்கள் எந்தெந்த இணைய பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது

Chennai , டிசம்பர் 07, 2022—ஐ.எம்.டி.பி, திரைப்படம், தொலைக்காட்சி, மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ ஆதார மையமாக திகழும் இது, இன்று 2022இல் இந்தியாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களை அறிவித்துள்ளது. மாதமாதம் ஐ.எம்.டி.பி இணையத்தினைப் பார்க்கும் 200 மில்லியனுக்கும் அதிகமான வருகையாளர்கள் உண்மையில் பார்க்கின்ற இணைய பக்கங்களின் அடிப்படையில் இந்த இறுதியான சிறந்த 10 நபர்களின் பட்டியலை ஐ.எம்.டி.பி தயாரிக்கிறது. தனுஷ் தான் இந்த ஆண்டின் தலைசிறந்த பிரபலமாகியுள்ளார், தி கிரே மேன் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற பல்வேறு மொழிகளில் வெற்றி பெற்றுள்ள திரைப்படங்களின் காரணமாக இவர்மீது ரசிகர்களுக்கு இருந்த ஆர்வத்தினால் இது சாத்தியமாகியுள்ளது.

ஐ.எம்.டி.பியின் 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள்*
1. தனுஷ்
2. அலியா பட்
3. ஐஷ்வர்யா ராய் பச்சன்
4. ராம் சரன் தேஜா
5. சமந்தா ருத் பிரபு
6. ஹ்ரித்திக் ரோஷன்
7. கியாரா அத்வானி
8. என்.டி. ராமா ராவ் ஜூனியர்.
9. அல்லு அர்ஜுன்
10. யஷ்
*ஐ.எம்.டி.பியின் 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த 10 மிகவும் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் என்பது 2022 ஆம் ஆண்டு முழுவதும் செய்யப்படும் ஐ.எம்.டி.பியின் வாராந்திர தரமதிப்பீட்டில் தொடர்ச்சியாக முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளவர்களின் அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த தரமதிப்பீடு என்பது மாதமாதம் ஐ.எம்.டி.பி இணையத்தினைப் பார்க்கின்ற உலகெங்கிலும் உள்ள 200 மில்லியனுக்கும் அதிகமான வருகையாளர்கள் உண்மையில் பார்க்கின்ற இணைய பக்கங்களின் அடிப்படையில் உருவாகிறது.

“இந்திய சினிமா, இணையத் தொடர்கள், மற்றும் நட்சத்திரங்களைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள உலகெங்கும் உள்ள மக்கள் ஐ.எம்.டி.பிக்குச் செல்கின்றனர், மேலும் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் தலைசிறந்த 10 நபர்களின் நமது பட்டியல் உலகளாவிய புகழுக்கான ஒரு தரநிலையாகவும் அவர்களது நடிப்புத் திறனில் ஒரு மைல்கல்லை அங்கீகரிப்பதாகவும் சாதனைப் படைத்த தருணத்தை விளக்குவதாகவும் அமைந்துள்ளது,” என்று ஐ.எம்.டி.பி இந்தியாவின் தலைவர் யாமினி பட்டோடியா தெரிவித்தார். “உலகெங்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள கலைஞர்கள் கொண்டாடப்படுகின்றனர், இது நமது நாட்டில் உள்ள பல்வேறு வகையான திறமைக்கான ஒரு சான்றாக உள்ளது. தனுஷ் போன்ற நடிகர்கள் அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு ரயன் கோஸ்லிங் மற்றும் கிரிஸ் எவான்ஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையாக பார்க்கப்படுகின்றனர் என்றால், என்.டி. ராமா ராவ் ஜூனியர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் அவர்களது தலைசிறந்த படைப்பான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்காக கொண்டாடப்படும் போது, ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்கள் திரைப்படத்தில் மீண்டும் நடிக்க வந்திருப்பதும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது.”

ஐ.எம்.டி.பியிடம் பிரத்யேகமாக பேசிய அலியா பட் இந்த ஆண்டிற்கான பட்டியலில் தான் சேர்க்கப்பட்டதற்கு அவரது பாராட்டினைத் தெரிவித்து, “2022 ஆம் ஆண்டுதான் எனக்கு திரைப்படங்களில் மிகவும் முக்கியமான ஆண்டாகும்—இந்த ஆண்டு எனது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், மேலும் நமது நாட்டின் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததை கௌரவமாக உணர்கிறேன். ஐ.எம்.டி.பி மக்களின் குரலுக்கான ஒரு உண்மையான ஆதாரமாகும் மேலும் என்னால் கேமரா! அன்பு மற்றும் ஒளியைய பார்த்து நடிக்க முடியும் வரை நான் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு சேவையை தொடர்ந்து வழங்குவேன் என்று நம்புகிறேன். மீண்டும் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இந்த ஆண்டின் புகழ்பெற்ற நட்சத்திரங்களைப் பற்றிய கூடுதல் தகவல்:
• தனுஷ் (நம்பர். 1) 2022 இல் ஐந்து படங்களில் தோன்றியுள்ளார்; நெட்ஃப்ளிக்ஸின் ஒரிஜினலான தி கிரே மேன், மற்றும் தமிழ் படங்களான மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், மற்றும் வாத்தி.
• எஸ்.எஸ். ராஜமௌலியின் தலைசிறந்த படைப்பான RRR (ரைஸ் ரோர் ரெவோல்ட்)— இன் முன்னணி அலியா பட் (நம்பர். 2), ராம் சரன் தேஜா (நம்பர். 4), மற்றும் என்.டி. ராமா ராவ் ஜூனியர் (நம்பர். 8)—இவர்கள் அனைவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
• பட் கங்குபாய் கத்தியாவாடி படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நடித்துடன் டார்லிங்ஸ் (இதுவும் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாக தயாரிக்கப்பட்டது) மற்றும் உலக அளவில் வெற்றி பெற்ற பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று: சிவா திரைப்படத்தில் இஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
• பொழுதுபோக்கு ரசிகர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னியின் செல்வன்: பாகம் 1 திரைப்படத்தில் தனது தலைசிறந்த பாத்திர நடிப்பிற்காக ஐஷ்வர்யாராய் பச்சனை (நம்பர் 3) ஆர்வமாக பார்க்கின்றனர்.
• கியாரா அத்வானி (நம்பர் 7) அவர்கள் ஜுக் ஜுக் ஜியோ மற்றும் பூல் புலையா 2 ஆகிய இரண்டு புகழ்பெற்ற திரைப்படங்களின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐ.எம்.டி.பி மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள் https://www.imdb.com/video/vi1945748761/ மேலும் அந்த முழு பட்டியலையும் இங்க வாசியுங்கள்: https://www.imdb.com/list/ls563964668/