August 30, 2025
  • August 30, 2025
Breaking News
May 27, 2019

ஆண்மையில்லாதவர்கள் – இளையராஜா டென்ஷன் வீடியோ

By 0 1172 Views

இசை ஞானி இளையராஜா பரபரப்புக்காக பேசுபவரல்ல என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். அப்படி ஒரு பப்ளிசிட்டி அவருக்கு எப்போதுமே தேவையில்லை. ஆனால், அவரது சூழ்நிலை தெரியாமல் எதையாவது கேட்டு விட்டால் மனத்தில் பட்டதைப் போட்டு உடைத்துவிடுவார்.

அப்படி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அவரிடம், அவரது இசையை எடுத்தாளும் படங்களைப் பற்றிக் கேட்டபோது வெடித்து “அப்படி எடுத்தாள்பவர்கள் ஆண்மையில்லாதவர்கள்…” என்று வெடித்துவிட்டார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

ஆனால், அவர் சொலவ்திலும் உண்மை இல்லமலில்லை. அவர் பாடல்களைப் பயன்படுத்திய பல படங்களில் அவர்கள் இசைத்த பாடல்களைவிட இவர் இசைத்ததை எடுத்துப் பயன்படுத்திய பாடல்களே மனதில் நின்றன. அதை அவர்கள் வியாபார உத்திக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.

ஆனால், அவரது இசை பக்தர்களாக இருக்கும் பெரும்பாலான இயக்குநர்கள் அவர் மேலுள்ள பற்றுதலாலும் அப்படி அவரது பாடல்களை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் நிஜம். அவர்களை இனம் கண்டு ராஜாவிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் எடுத்துச் சொன்னால் நலம். 

அவரது தெறிக்க விட்ட வீடியோ பேட்டி கீழே…