July 14, 2026
  • July 14, 2026
Breaking News
June 8, 2026

ஹீ மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026) ஆங்கிலப் பட விமர்சனம்

By 0 46 Views

1980-களின் பிரபல கார்ட்டூன் மற்றும் டாய் பிராண்டான Masters of the Universe உலகத்தை, இயக்குநர் Travis Knight மிகப் பெரிய லைவ்-ஆக்ஷன் சாகசமாக மீண்டும் திரைக்கு கொண்டு வந்துள்ளார்.

Nicholas Galitzine ஹீ-மேன் மற்றும் பிரின்ஸ் ஆடமாகவும், Jared Leto ஸ்கெலிட்டராகவும் நடித்துள்ளனர்.

படத்தின் கதை இதுதான்…

ஸ்கெலிட்டரின் தாக்குதலால் சிறுவயதில் எட்டர்னியா உலகத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட பிரின்ஸ் ஆடம், பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை உணர்ந்து மீண்டும் எட்டர்னியாவிற்கு திரும்புகிறார்.

ஸ்கிலிட்டருக்கு தேவையான ஒன்று ஹீ மேனிடம் இருக்கிறது. ஹீ மேனுக்கு தன் உலகமான எட்டர்ணியாவில் கொடுங்கோலனாக ஆட்சி செய்யும் ஸ்கெலிட்டரை எதிர்த்து, “ஹீ-மேன்” ஆக மாறி தனது உலகத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

எனவே இருவரும் மோத முடிவு என்ன ஆனது என்பதுதான் இந்தபடம்.

ஹீ-மேனாக நிக்கோலஸ் கலிட்சைன் கச்சிதமாக பொருந்தியுள்ளார். சராசரி மனிதனாக பூமியில் இருக்கும்போது இயல்பான நடிப்பை தந்திருப்பவர் ஹீ.மேனாக மாறியதும் ஒரு வீரனாக புதிய முகம் காட்டி இருக்கிறார்.

வண்ணமயமான எட்டர்னியா உலகம், பிரமாண்டமான செட்கள் மற்றும் VFX கண்களை கவர்கின்றன.

ஆக்ஷன் காட்சிகள், குறிப்பாக ஸ்நேக் மவுண்டன் போர்க்காட்சி, ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

பழைய கார்ட்டூன் ரசிகர்களுக்கான ஏராளமான நினைவூட்டல்கள் உள்ளன.

தேவைக்கு மேல் நீளும் திரைக்கதை சில இடங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது.

ஸ்கெலிட்டரை தன் பராக்கிரமத்தால் ஹீ மேன் அடுத்து விரட்டுவார் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் ஸ்கெலிட்டரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது ஆக்சன் பட இலக்கணம் மீறிய செயலாக இருக்கிறது.

அதேபோல் கிட்டத்தட்ட ஹீரோயின் போல் வந்திருக்கும் கமீலா மெண்டசை காதலுடன் ஹீமேன் முத்தமிட நெருங்க “நான் உன்னை விட வயதில் பெரியவள். அத்துடன் நாம் நண்பர்களாகத்தான் பழகுகிறோம்..!” என்று கமீலா விலகுவது இளசுகளுக்கு கண்டிப்பாக ஏற்புடையதாக இருக்காது.

சிறுவயதில் ஹீ-மேன் கார்ட்டூனை ரசித்தவர்களுக்கு இது ஒரு நல்ல திரையரங்க அனுபவமாக இருக்கும். புதிய பார்வையாளர்களுக்கும் பொழுதுபோக்கு அளிக்கும் அம்சங்கள் உள்ளன, ஆனால் கதையில் இன்னும் வலிமையும், திரைக்கதையில் சுவாரஸ்யமும் இருந்திருக்கலாம்.

ஹீ மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் – பொழுதுபோக்க ஒரு சாகசம்..!

– வேணுஜி