September 24, 2026
  • September 24, 2026
Breaking News
March 25, 2026

ஹேப்பி ராஜ் திரைப்பட விமர்சனம்

By 0 199 Views

திரைப்படத்தின் மையமாக ஜார்ஜ் மரியான் இருக்கிறார். அவர் தனது கதாபாத்திரத்தை அபாரமான நடிப்பு திறனுடன் நியாயப்படுத்தி வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவர் தன்னுடைய கதையை சொல்லும் அந்த ஃப்ளாஷ் பேக் படத்தின் இதயம் போன்றது.

நாயகியின் தந்தையாக நம் காதல் தேசம் அப்பாஸ் மீண்டும் வந்திருப்பது இந்தப் படத்திற்கு கூடுதல் மதிப்பை தருகிறது; ஜார்ஜ் மரியான் வட தருவத்தில் நின்று பிடிவாதம் பிடித்தால் அவருக்கு எதிராக தென்துருவத்தில் இவர் நிற்பது அவருக்கு போட்டியான சரியான தேர்வாக ஆக்குகிறது.

ஜஸ்டின் பிரபாகரின் இசையும், மதன்  ஒளிப்பதிவும் படத்தை கிராமம் நகரம் எல்லாவற்றிலும் நேர்த்தியாக வெளிப்படுத்து கின்றன.

முதல் பாதி சற்று மெதுவாகவும் திருப்பங்கள் குறைவாகவும் இருந்தாலும், அது விறுவிறுப்பு குறையாத இரண்டாம் பாதிக்கான ஒரு தயாரிப்பாக அமைகிறது.

படத்தை எழுதி இயக்கி இருக்கும் மரிய ராஜா இளஞ்செழியன், கூட்டுக் குடும்பங்கள் அருகி நியூக்ளியர் குடும்பம் எனப்படும் தனித்து விடப்பட்ட குடும்பமாக மாறிவரும் இன்றைய சூழலை கருத்தில் கொண்டு குடும்பத்தின் வலிமையையும்யும் பெற்றோரின் தியாகத்தையும் அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதி இருக்கிறார். 

அத்துடன் ஒரு தமிழன் கிராமத்திலிருந்து  நகரத்துக்கு வந்து முன்னேறுவதற்குள் எந்த படிப்பறிவும் இல்லாமல் வடக்கிலிருந்து தெற்கில் வந்து குவிyம் வடக்கன்கள் பல மடங்கு முன்னேறி வரும் அரசியலையும் தொட்டுக்காட்டி மௌனமாக தமிழர்களை எச்சரித்து இருக்கிறார்.

ஹேப்பி ராஜ் – மகிழ்ச்சி..!

– வேணுஜி