April 23, 2024
  • April 23, 2024
Breaking News
October 8, 2019

வட தமிழக வாழ்வியல் உலக அரசியல் பேசும் குண்டு

By 0 441 Views
இயக்குனர் பா. இரஞ்சித்தின்   நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ‘ இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து  வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. 
 
தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை  இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார்.
 
கிஷோர் ஒளிப்பதிவு ,  கலை இயக்குனராக  
 த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.
 
நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது.
 
ஜனரஞ்சகமான கதையமைப்பில் , மக்கள் ரசிக்கும்விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இயக்குனர் கூறுகிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.