August 30, 2025
  • August 30, 2025
Breaking News
August 18, 2025

ஜெரி கேர், 10 ஆவது கிளை வேளச்சேரியில் தொடக்கம்..!

By 0 41 Views

நாட்டிலேயே முதன்முறையாக டயாலிசிஸ் டே கேர் வசதியுடன் கூடிய – முதியோருக்கான ஆதரவு மையம் இது..!

சென்னை| ஆகஸ்ட் 18, 2025: முதியோர் பராமரிப்புத்துறையில் நாட்டின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர், சென்னை வேளச்சேரியில் தனது புதிய மையத்தைத் திறந்துள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் 10 ஆவது கிளை இதுவாகும். ஜெரி கேர்-ன் விரைவான வளர்ச்சி மற்றும் இந்தியாவில் முதியோர் பாதுகாப்புக்கான தனது தளர்விலா அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாக இந்தக் கிளை திறப்பு அமைந்துள்ளது.

தற்போதைய புதிய கிளையில் 75 படுக்கைகள் உள்ளன. முதியோருக்குத் தேவையான வல்லுநர்களின் துணைகொண்ட மருத்துவ வசதி (எ.கா: அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, நாட்பட்ட நோயாளிகளுக்கான பராமரிப்பு நிர்வாகம், டிமென்ஷியா நிலையில் இருப்போருக்கான பராமரிப்பு, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியோருக்கான பராமரிப்பு ஆகியவற்றை அதிநவீன வசதிகளுடன் இம்மையத்தில் பெறலாம். இங்கு முதியோருக்கான டயாலிசிஸ் வசதியை நாட்டிலேயே முதன்முறையாக (முதியோர் பராமரிப்பு மைய வரலாற்றிலேயே முதன்முறையாக) அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜெரி கேர்.

பின்னிரவு நேரத்தில்கூட சிகிச்சை தேவைப்படும் குடும்பங்களின் சுமையை இது குறைக்கும். ஜெரி கேர் மருத்துவமனைக்கு அருகிலேயே இம்மையம் அமைந்திருக்கிறது. இம்மையத்தில் முதியோருக்கான உடற்பயிற்சி மையம் (பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு சிகிச்சைப் பயிற்சி தேவைப்படுவோருக்காக) செயல்படுகிறது. மேலும், ஓய்வெடுக்கவும் மற்றவர்களுடன் கலந்து பழகவும் மனதைப் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளவும் எல்டர் குரோவ் என்ற திறந்தவெளிப் பூங்கா பகுதி அமைக்கப்படுகிறது.

இம்மையத்தை தேசிய விருதுபெற்ற நடிகையும் புகழ்பெற்ற இயக்குநரும் சிறந்த கொடையாளருமான திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்கள் திறந்துவைத்தார். சமூக செயல்பாடுகளை, குறிப்பாக முதியோரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்ற அவரது எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இந்நிகழ்வு அமைந்தது. அவருடன் இணைந்து பத்மஸ்ரீ பேராசிரியர் மருத்துவர்.வி.எஸ். நடராஜன் அவர்களும் இம்மையத்தைத் தொடங்கிவைத்தார். ’இந்தியாவில் முதுமை நோயில் மருத்துவத்தின் தந்தை’ என்று போற்றப்படும் அவர், முதியோரின் உடல் நலன் குறித்த நாட்டின் அணுகுமுறையைச் செதுக்குவதில் முன்னோடியும் ஆவார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெரி கேர் ஹெல்த் சர்வீசஸ் அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மருத்துவர் லட்சுமிபதி ரமேஷ் பேசுகையில், “ஜெரி கேர்-ன் பயணத்தில் இது ஒரு மைல் கல் ஆகும். இந்தியாவில் முதியோருக்கான மருத்துவத் தேவைகள் அதிகரித்துவரும் நேரம் இது. இச்சூழலில் அவர்களுக்கு சிறப்பான சேவையளிப்பது என்ற எமது குறிக்கோளின் பிரதிபலிப்புதான் இந்த அதிநவீன மையத்தின் திறப்பு விழா. நமது மக்கள் தொகையில் 10% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 20250 வாக்கில் இது இரண்டு மடங்காக ஆகிவிடும். முதியோருக்கான பராமரிப்புக்கான தேவை முன்னெப்போதும் இதுபோல இருந்ததில்லை” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “ வேளச்சேரியில் திறக்கப்படும் எமது 10 ஆவது மையம், எமது உயர் தரத்துக்கான சான்றாக அமையும். தினசரி பராமரிப்பு மையத்திலேயே டயாலிசிஸ் வசதி, முதுமை நோயியல் மருத்துவமனை, முதியோருக்கான உடற்பயிற்சிக்கூடம், பிசியோதெரபி சேவைகள் ஆகியவற்றை அருகில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். எமது எல்லா சேவைகளுக்கும் ஒரே நோக்கம்தான்: வாழ்க்கையை ஆரோக்கியம் நிறைந்ததாக, எளிதானதாக, கண்ணியம் மிக்கதாக உருவாக்க வேண்டும் என்பதுதான். ஜெரி கேர்-ல் மருத்துவ சிகிச்சையைத் தாண்டி எங்களுக்கு ஒரு நோக்கமுண்டு. முதியோருக்கு, தாங்கள் கவனித்துக்கொள்ளப்படுகிறோம் என்ற உணர்வைத் தரக்கூடிய-அவர்களுக்கு கவனிப்பைத் தரக்கூடிய-மதிப்பளிக்கக்கூடிய ஒரு இடமாக இது உருவாக வேண்டும் என்பதே அது” என்றார்.

இம்மையத்தைத் தொடங்கிவைத்த தலைமை விருந்தினர் திருமதி சுஹாசினி மணிரத்னம், ”முதியோர் பராமரிப்பு என்பது என் இதயத்துக்கு நெருக்கமான விஷயம். ஜெரி கேர்-ன் பணிகளைப் பார்க்கும்போது அத்தகையதொரு நல்ல பணியை வாஞ்சையுடன் அவர்கள் செய்துவருவதை உணர முடிகிறது. இந்த மையம், வெறுமனே மருத்துவ சேவையை மட்டும் அளிப்பதில்லை. மாறாக, கண்ணியம், வசதி, தரமான வாழ்க்கையை அளிக்கிறது. அதற்குத் தகுதியானவர்கள் மூத்தோர் என்பேன்” என்றார்.

கெளரவ விருந்தினரான பத்மஸ்ரீ பேராசிரியர் மருத்துவர். வி.எஸ். நடராஜன் தனது தொடக்க உரையில், “வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை பெருகிவரும் இந்நிலையில் முதியோர் பராமரிப்பு என்பது காலத்தின் கட்டாயம் ஆகும். ஜெரி கேர்-ன் 360 டிகிரி கோண அணுகுமுறை என்பது, முதியோருக்கான நோயியல் மருத்துவம் மற்றும் அவர்களுக்கான மதிப்பு ஆகியவற்றின் கலவையாகும். எதிர்காலத்துக்கான தேவை இது” என்றார்.

ஜெரி கேர் பற்றி…

முதியோர் நலனுக்காக நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் ஒருங்கிணைந்த தொடர் மருத்துவமனைகள் என்றால் அது, ஜெரி கேர் தான். இதனை, 2018 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற முதுமை நோயியல் மருத்துவர்களான லட்சுமிபதி ரமேஷ் மற்றும் வி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஆகியோர் கூட்டாகத் தொடங்கினர். தனிப்பட்ட முறையில் இல்லத்திலேயே பராமரிப்பு, முதியோருக்கான பராமரிப்புடன் கூடிய இல்லங்கள் (Assisted Living Centres), மருத்துவமனை சேவைகள் ஆகியவை இங்குண்டு. முதியோருக்காக நாட்டின் முதல் பன்னோக்கு மருத்துவமனைகளை உருவாக்கிய ஜெரி கேர், நாட்டின் பல்வேறு நகரங்களில் 50,000 முதியோருக்கு சேவையாற்றிவருகின்றன.

கூடுதல் தகவல்களுக்கு: www.gericare.in.