October 30, 2024
  • October 30, 2024
Breaking News
August 20, 2018

விஜய், ஜெயம் ரவியால் நடிக்க முடியாத கதை ஜீனியஸ்

By 0 1062 Views

இயக்குனர் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன், ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதிலிருந்து…

“ஜீனியஸ்’ கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. கடைசியாக இந்தக் கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ‘ஜீனியஸ்’ படமாக வந்துள்ளது. ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

Genius Press Meet

Genius Press Meet

எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘பிகே’ திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தின் பாதிப்பில்தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் பிகே போல மெசேஜ் சொல்லும் என்டர்டெயினாராக இருக்கும். இதன் கதை அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியிட முடிவு செய்துள்ளோம்..!”

படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ரோஷன் பேசியதிலிருந்து…

“சில வருடங்களுக்கு முன்னால் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நானும் என்னுடைய நண்பனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்கச் சென்றுவிட்டேன். காரணம் வீட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறிவந்தார்கள்.

Genius

Genius

அதன் பின்னர் சினிமா ஆசை இல்லாமல்தான் இருந்தேன். கல்யாணத்துக்குப் பின் என்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் “நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள்..?” என்று கேட்டார். அப்போது தொடங்கிய விஷயம்தான் இன்று சுசீந்தரன் சார் இயக்கத்தில் ஜீனியஸ் திரைப்படத்தில் நான் நடிக்க நேர்ந்தது.

நான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரானது என்னுடைய நண்பன் என்னுடைய தொழிலையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்வதாகக் கூறியதும், எனக்காக சினிமாவைக் கற்றுக்கொண்ட என்னுடைய இன்னொரு நண்பன் மற்றும் நண்பர்கள் பலரின் உதவியால்தான். ஜீனியஸ் போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை சினிமாவுக்கும், மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி..!”