June 15, 2026
  • June 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மனைவி மிரட்டலால் வசனகர்த்தா ஆன வெறித்தன பாடலாசிரியர்
November 13, 2019

மனைவி மிரட்டலால் வசனகர்த்தா ஆன வெறித்தன பாடலாசிரியர்

By 0 973 Views

உலகப் புகழ்பெற்ற டிஸ்னி தயாரித்திருக்கும் ‘ஃப்ரோஸன்’ படத்தொடரின் இரண்டாம் பாகம் இந்தியாவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என நான்கு மொழிகளில் நவம்பர் 22-ல்  வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் இப்படத்தின் தமிழ் பதிப்பில் பணிபுரிந்துள்ளார்கள். இப்படத்தின் முன்னோட்டத்திற்க்கான பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் வசனம் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக், ஹீரோயின் கதாபாத்திரமான ‘எல்ஷா’விற்கு பின்னணி பேசியிருக்கும் ஸ்ருதிஹாசன், ‘எல்ஷா’வின் தங்கை பாத்திரமான ‘ஆன்னா’விற்கு பின்னணி பேசியுள்ள திவ்யதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

“நான் முதல் முறையாக வசனம் எழுதும் படமிது. நாம் வாழ்வில் பல சிறு விசயங்களை இழந்திருப்போம் ஒரு கட்டத்தில் நாம் நம்மையே தொலைத்திருப்போம் இப்படத்தில் எனக்கு பிடித்தது, என்ன ஆனாலும் மனிதத்தை மட்டும் வாழ்வில் தொலைத்துவிடக்கூடாது எனும் அருமையான கருத்து தான். எல்லாவற்றிற்கும் மேலாக என் மனைவியின் மிரட்டலால் தான் இந்தப்படத்தில் பணியாற்றினேன் அவர் இப்படத்தின் தீவிர ரசிகை..!” என்றார் பாடலாசிரியர் விவேக்.

“சிறு வயது முதல் டிஸ்னியின் படங்கள் எனது ஃபேவரைட். எல்லா இளவரசி கதையிலும் இளவரசன் வந்து மீட்டுப் போக இளவரசி காத்திருப்பாள் ஆனால் இந்தக்கதையில் அதெல்லாம் இல்லை. அவள் தனித்துவமானவள். அவளுக்கென லட்சியங்கள் இருக்கிறது. அவளுக்கு ஆசைகள், கடமைகள் இருக்கிறது.

இப்படியான படத்தில் பணிபுரிய யாருக்கு தான் பிடிக்காது. இப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் பணிபுரிந்தது மேலும் மகிழ்வை தந்தது..!” என்றார் டிடி என்கிற திவ்ய தர்ஷினி.

“ப்ரோஸன்’ படம் உலகெங்கிலும் பெரும் வெற்றிபெறக் காரணம் பல பெண்களுக்கு நம்பிக்கை தருவதாக, முன்னுதாரணமாக இருப்பதுதான். 

என் தங்கை அக்‌ஷராவுடன் எனக்கு இருந்த நெருக்கமான உறவு இப்படத்தில் பணிபுரிவதில் பேருதவியாக இருந்தது. திவ்ய தர்ஷினி ‘ஆன்னா’ பாத்திரத்தை அற்புதமாக செய்திருந்தார். பாடலாசிரியர் விவேக் படத்திற்குப் பொருத்தமான அருமையான வசனங்கள் தந்திருந்தார்.

வழக்கமாய் என் படங்களுக்கு நான் ஒன்றரை நாளில் டப்பிங் முடித்து விடுவேன் ஃப்ரோஸன் 2-வை ஒரே நாளில் முடித்தேன். அதிலும் பாடலை நானே பாடியது எனக்கு பெரிய மகிழச்சி..!” என்றார் ஸ்ருதிஹாசன். 

Frozen 2 Tamil Team

Frozen 2 Tamil Team