October 16, 2025
  • October 16, 2025
Breaking News
January 12, 2020

ரஜினியை இலங்கைக்கு அழைத்த முன்னாள் முதல்-மந்திரி

By 0 648 Views

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் இல்லையோ ஆனால் அவர் அரசியலுக்குள் இருப்பது உறுதியான விஷயம்.

 Thamizharkal எந்த நாட்டு அமைச்சர்களோ முதலமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வரும்போது ரஜினியை பார்ப்பது என்பது ஒரு வாடிக்கையான செயலாகி விட்டது.

அப்படி தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்.

அப்போது இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து ரஜினியிடம் அவர் விளக்கமளித்தார்.

  அத்துடன் ரஜினியை இலங்கைக்கு அழைத்த அவர், அப்படி வருகையில் வடக்கு மாகாண பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பை விடுத்தாரென தெரிகிறது.

வ ரும்கால தமிழக முதல்வரை அழைக்கும் இலங்கை வடக்கு முன்னாள் முதல்வர்..?!