கனமழை காரணமாக கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் தற்போது வைகை அணைக்கு 4 ஆயிரத்து 941 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாக இருக்க, இன்று காலை நிலவரப்படி, வைகை அணை 66 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து மதுரை, தேனி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது.
வைகை நதிக்கரையோரம் வாழும் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.