April 20, 2025
  • April 20, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கேரள மார்க்கெட்டைக் குறி வைக்கும் விமல் – கேலரியுடன்
December 4, 2018

கேரள மார்க்கெட்டைக் குறி வைக்கும் விமல் – கேலரியுடன்

By 0 2368 Views

யார் மச்சம் எப்போது வேலை செய்யுமென்றே தெரியாது. இப்போதைக்கு விமலுக்கு மச்சம் உச்சத்தில் இருக்கிறது. இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விலை போனதும், அதிக தியேட்டர்களில் வெளியாவதுமான படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இம்மாதம் 7ம்தேதி வெளியாகும் படம் இது.

கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள்தான் வெளியாகுமாம். ஆனால் விமலின் இந்தப் படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக, விமல் கேரள மார்க்கெட்டை இந்தப்படத்தின் மூலம் குறி வைப்பது உறுதியாகிறது.

விமலுடன் இந்தப்படத்தில் ஆஷ்னா ஜாவேரி நடிக்க, சர்மிளா மாண்ட் ரே தயாரிப்பில் ஏ.ஆர்.முகேஷ் இயக்கும் படம் இது. உலகம் முழுக்க 500 தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்தைப் பார்த்து கோலிவுட் வாய்பிளந்து நிற்கிறது. அப்படி என்ன படத்தில் விசேஷம் என்பவர்கள் கீழே போய் கேலரியைப் பாருங்கள்…

(7)

Image 7 of 8