பூமர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத ஜூமர்ஸ் கதை.
எனில்…
சீனியர் சிட்டிசன்களால் எப்படி இந்தக் கதையை ஏற்றுக் கொள்ள முடியும்..?
நாயகன் பிரதீப்பின் முதல் காதல் புட்டுக் கொள்கிறது. திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நிற்கும் எக்ஸ் – இடம் போய் “ஏன் என்னைக் கழற்றி விட்டாய்..?” என்று கேட்டதும் மட்டுமல்லாமல் தவறுதலாக அவள் தாலியையும் கழுத்தில் இரந்து பிடுங்கி அவர் பண்ணும் அதகளம் போலீஸ் ஸ்டேஷனில் அவரைக் கொண்டு வைக்கிறது.
முறைப்பெண் மமீதா பைஜூ வந்து அவரை வெளியே எடுக்கிறார். இத்தனை அழகான மாமா மகள் இருக்கும்போது இவர் ஏன் வேறு பெண்ணின் பின்னால் சுற்றினார் என்ற கேள்வி நமக்கு வரும்போதே மமிதா பைஜூவுக்கு அவர் மேல் காதல் வந்துவிடுகிறது. ஆனால் பிரதீப்புக்கு வரவில்லை.
எனவே விரக்தியில் மமிதா வெளியூர் செல்ல, இங்கே மண்டையில் அடிபட்ட பிரதீப்புக்கு அவர் மீது காதல் வருகிறது.
ஆனால் திரும்பி வரும் மமிதாவுக்கு அங்கே புதிதான காதல் முளைத்திருக்கிறது.
இதற்குப் பின் நடப்பதெல்லாம் அறுபது ஆண்டு கால தமிழ் சினிமா கட்டிக் காத்து வந்த சென்டிமெண்ட்களை உடைப்பதுதான்.
‘ டிராகன் ‘ படத்தில் என்ன செய்தாரோ அதையே இதிலும் பிரதீப் ரங்கநாதன் செய்கிறார். இப்போதைக்கு இதை ரசிக்க முடிகிறது, தொடர்ந்து இப்படியே போனால்.. சிக்கல்தான்..!
ஆனால் மமிதா பைஜு காட்சிக்குக் காட்சி ஸ்கோர் செய்கிறார். ஆனால் கேரக்டரைசஷன் மிஸ்ஸிங்..!
மமிதாவின் மந்திரி தந்தையாக வரும் சரத்குமாருக்கு செம்ம ஸ்கோப்புள்ள வேடம். காமெடியாகவே நகரும் அவர், திடீரென்று காட்டும் வில்ல முகம் மிரட்டல்.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு சென்னையைக் கூட வெளிநாடு போல் காட்டி இருக்கிறது.
சாய் அபயங்கரின் இசை போகப்போக நமக்குப் பிடிக்குமோ… அல்லது பழகுமோ..?
இயக்குனர் கார்த்தீஸ்வரன் காதல் மற்றும் செண்டிமெண்டுகளில் பல விதிகளை மீறினாலும் “தாலியைப் பார்க்காதீர்கள்… தாலிக்குப் பின்னால் இருக்கும் பெண்ணின் மனதைப் பாருங்கள்..!” என்கிற மெசேஜ் சூப்பர்..!
Dude – பிரதீப் ரங்கநாதனின் ஹேட்ரிக்..!
– வேணுஜி
–