July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லைக்கா சிவகார்த்திகேயன் கை கோர்க்கும் டான் முதல் பார்வை வெளியானது
November 10, 2021

லைக்கா சிவகார்த்திகேயன் கை கோர்க்கும் டான் முதல் பார்வை வெளியானது

By 0 571 Views

பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும், சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற சிறந்த நடிகர்கள் படக்குழுவினருடன் இணைய, இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் கூட்டி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழுவினர் தற்போது கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்புடன் வெளியான மோஷன் போஸ்டர், இது ஒரு காமெடி கலக்கல் நிறைந்த, கல்லூரி சார்ந்த பொழுதுபோக்கு படம் என்ற தோற்றத்தை தந்தது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அதை மீண்டும் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இப்படம் கல்லூரியின் பிண்ணனியில் எப்போதும் வழக்கமான அம்சமான, மாணவர்கள் Vs பேராசிரியர்கள் என்ற கருப்பொருளைச் சுற்றி அமைந்தது என்பதையும் வெளிப்படுத்தும்படி அமைந்துள்ளது. இத்திரைப்படம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், பார்வையாளர்களுக்கு திருவிழா கொண்டாட்ட அனுபவத்தை வழங்கும், என்று தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘டாக்டர்’ படத்தில், திரையில் வெகு அழகான கெமிஸ்ட்ரியைப் பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

இவர்களுடன் நடிகர் S.J.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள் ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.