August 30, 2025
  • August 30, 2025
Breaking News
September 17, 2020

டப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்

By 0 779 Views

இந்த லாக் டவுன் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியிலேயே வைத்திருக்கிறது.

‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடல்கள் வெளியான நொடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவர்களின் விருப்பபட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

இந்நேரத்தில் “டாகடர்” படக்குழு மேலும் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. இன்று செபடம்பர் 17 அன்று “டாக்டர்” படக்குழு படத்தின் டப்பிங் பணிகளை சென்னையில் ஒரு சிறு பூஜையுடன் துவங்கியுள்ளது.

Doctor is on Dubbing Mode

Doctor is on Dubbing Mode

அரசு அறிவித்துள்ள கொரோனா நோய்க்கான, அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும், போதுமான தனிமனித இடைவெளியையும் கண்டிப்பான முறையில் கடைப்பிடித்து, டப்பிங் பணிகளை செய்து வருகிறது படக்குழு.

சிவகார்த்திகேயனின் SK Productions இப்படத்தை தயாரிக்க, கொடாப்பாடி J.ராஜேஷ் அவர்களின் KJR Studios இணைந்து “டாக்டர்” படத்தை தயாரிக்கிறார்கள்.

‘கோலமாவு கோகிலா’ படப்புகழ் இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. 

இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகி பாத்திரத்தில் நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.