August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சென்னையில் தோனி – சொந்தப்படம் எல்ஜிஎம் இசை விழாவுக்கு வருகை
July 10, 2023

சென்னையில் தோனி – சொந்தப்படம் எல்ஜிஎம் இசை விழாவுக்கு வருகை

By 0 480 Views

கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு மதிப்பிற்குரிய டி 20 லீக்கை வென்ற பிறகு கேப்டன் தல தோனி முதன்முறையாக சென்னைக்கு வருவதால், சென்னை ‘தோனி மேனியா’வாக மாறி இருக்கும் தருணங்கள்…
தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் முதல் தயாரிப்பான ‘எல்ஜிஎம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தின் வெளியிட்டு விழாவில், மிஸ்டர் தோனி மற்றும் திருமதி சாக்ஷி தோனி ஆகியோர் கலந்துகொண்டு சென்னையில் வெளியிடுகிறார்கள்.

‘எல் ஜி எம்’ படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இசையமைப்பாளரான ரமேஷ் தமிழ்மணி எழுதி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.