முன்னாள் இந்திய பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூருவுக்கு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது.
கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
திருமண இடம் அமைந்துள்ள ராமநகரத்திற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் குமாரசாமி குடும்பத்தின் பிரமாண்டமான திருமணத்தில் பங்கேற்க சுமார் 30-40 கார்கள் பெங்களூரிலிருந்து திருமண மண்டபத்தை நோக்கி செல்வதை காண முடிந்தது. திருமணம் நடக்கவிருக்கும் இடத்திலிருந்து குறைந்தது 15 கி.மீ தூரத்தில் ஒரு இடத்தில் ஊடக நபர்கள் நிறுத்தப்பட்டனர்.
இந்தநிலையில், குமாரசாமியின் மகன் நிகில் திருமணத்தில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத்நாராயண், ‘நிகில் திருமணம் குறித்து ராம்நகர் இணைக் காவல் கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த திருமணம் விவகாரம் ஊடக வெளிச்சத்தில் இருந்ததன் காரணமாக அறிக்கை கேட்கப்பட்டிருந்தது.
ஏதேனும் விதிமீறல்கள் நடைபெற்றிருந்தால் இதுதொடர்பாக உரிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். இதுதான் நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நேரம்.
விதிமுறைகளை மீறியிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் அது அரசாங்கத்தை கேலிக்கூத்தாகுவது போலாகும்…’ என்று தெரிவித்தார்.
கல்யாண வீடியோ…