October 18, 2025
  • October 18, 2025
Breaking News
March 8, 2022

திருமாவளவன் எம்பி பங்கேற்ற மகளிர் தின சிறப்பு சீன கண்ணாடி கோப்பை சிகிச்சை

By 0 557 Views

2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அல் ஷிபா, பிரத்தியேகமான சீன கண்ணாடிக் கோப்பை ( Cupping) சிகிச்சையில் சிறந்த பயிற்சி மற்றும் பட்டம் பெற்ற பணியாளர்களைக் கொண்ட கைதேர்ந்த சிகிச்சையகத்தை நடத்தி வருகிறது.

சிறந்த அனுபவமிக்க பணியாளர்களின் துணைகொண்டு உலக தரத்திலான கப்பிங் சிகிச்சை மற்றும் அது தொடர்பான பல்வகை சேவைகளை வழங்குகிறது. மேலும் சிகை முகப் பராமரிப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான சேவையில் 20 வருடங்கள் அனுபவம் பெற்ற முன்னணி நிறுவனமான அல் ஷிபாவுக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மார்ச் 8, 2022 ஆம் நாள் மகளிர் தினத்தை முன்னிட்டு அல் ஷிபா சிகிச்சையகம் சென்னையில் உள்ள தனது கிளையில் 100 பெண்களுக்கு சிறப்பு கப்பிங் சிகிச்சை வழங்க முடிவு செய்தது.

மகளிர் தினமான மார்ச் 8 அன்று காலையில் அல் ஷிபா சிகிச்சையகம் அமைந்துள்ள சென்னை நந்தனம் கிளையில் 100 பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க முடிவு செய்து அந்த மாபெரும் நிகழ்வை முனைவர், பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத்தின் தலைவர்) தலைமை ஏற்க வழக்கறிஞர் திருமதி எழில் கரோலின் ( தலைவர் முனைவர் அம்பேத்கர் பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பு ) துவக்கி வைத்தார்.

அல் ஷிபா நழுவ சிகிச்சையகத்தை நடத்திவரும் மருத்துவர் எம் ஏ பெனாசி, தன்னுடைய முதுகலை பட்டப் படிப்பின் போதே பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக இருந்த கப்பிங சிகிச்சை முறையால் ஈர்க்கப்பட்டு அதில் மேற்படிப்பு மேற்கொள்ள முடிவு எடுத்து அந்த துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த வல்லுநராக தேர்ச்சி பெற்றார்.

அவர் அழகியல் மற்றும் சரும பராமரிப்பு நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற உறுப்பினர் ஆவார். அத்துடன் அவர் Hijiama சிகிச்சையில் முதுகலை பட்டம் பெற்ற பதிவு தேர்ச்சி பெற்ற ஒரு கப்பிங்  சிகிச்சை நிபுணரும், சர்வதேச கப்பிங் சிகிச்சை நிறுவன சங்கத்தின் உறுப்பினரும் ஆவார்.

சரும பராமரிப்பு தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள வரும் மக்களுக்கு இயற்கையான சிகிச்சை முறைகள் மற்றும் சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு ‘எங்கள் பெயரே எங்கள் கனவு ‘ என்ற நோக்கத்தில் அல் ஷிபா நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறுகிறார் மருத்துவர் பெனாசிர்.

அல் ஷிபா கப்பிங் சிகிச்சையகம் சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள டெம்பிள் டவர்ஸ் கட்டடத்தில் அமைந்துள்ளது.

+91 88 38 664 604 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சிகிச்சைக்கான ஆலோசனை நேரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.